நடிகை நயன்தாரா நடித்த அன்னபூரணி படம் கடந்த மாதம் வெளியானது. பெரிய அளவில் நயன்தாரா எதிர்பார்த்த இந்த படம், ஏமாற்றத்தை தந்தது. இது நயன்தாராவின் 75வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் சில காட்சிகள் சர்ச்சையாகி, மும்பையில் போலீசில் புகார் தரும் அளவுக்கு சென்றுள்ளது.
நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நயன்தாரா நடித்தார். படம் பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் நயன்தாராவுக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் ஏனோ வரவில்லை. தமிழில் இப்போது மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார்.
நயன்தாராவை பொருத்த வரை தமிழ் சினிமாவில் இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடித்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். திருமணமானவர், பிள்ளைகள் பெற்றவர், வயது கடந்தவர் என்ற கோணத்தில் தன்னை ஆண்ட்டியாக யாரும் கருதக் கூடாது என்பதால்தான், வாடகைத்தாய் மூலம் பிள்ளைகளை பெற்றுக்கொண்டார்.
நயன்தாரா, சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பிஸினஸ் மூலமாகவும் அதிக வருமானம் ஈட்டி வருகிறார். நயன்தாரா மட்டுமின்றி பல நடிகர், நடிகையர் தங்களது வருமானத்தில் மிகப்பெரிய பிஸினஸ் நிறுவனங்களை நடத்தி வருவது ரசிகர்களுக்கு தெரியாது. அவர்களை பொருத்தவரை பல நூறு கோடிகளை அதில் முதலீடு செய்கின்றனர்.
நடிகை நயன்தாரா 9 ஸ்கின் என்ற அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன்மூலம் பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கின்களையும் மார்க்கெட்டிங் செய்கிறார். அவ்வப்போது வெளியிடங்களில், தனது 9 ஸ்கின் நிறுவனத்துக்கான பிரமோ நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு பேசுகிறார்.
சமீபத்தில் சேலத்தில் ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கேற்றார். அதில் நயன்தாரா பேசுகையில், சானிடரி நாப்கின் என பெயர் சொல்லவே ஒரு காலத்தில் மிகப்பெரிய தயக்கம் இருந்தது. இப்போது அதை வெளியில் பேசுவதே பெரிய ஒரு மாற்றம்தான். மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு இன்னும் பல பெண்களிடம் இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் அந்த விழிப்புணர்வு போய் சேர வேண்டும். நான் ஆரம்பித்த இந்த நிறுவனத்தின் நோக்கமே, ஒவ்வொரு பெண்ணுக்கும் அந்த விழிப்புணர்வு சென்று சேர வேண்டும் என்பதுதான், என்று கூறியுள்ளார்.





