- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் கேபிஒய் பாலா செஞ்ச வேலையை பாருங்க - அதிரடியாக வைரலாகும் வீடியோ

மீண்டும் கேபிஒய் பாலா செஞ்ச வேலையை பாருங்க – அதிரடியாக வைரலாகும் வீடியோ

- Advertisement -

சமீபத்தில் சென்னையில் பலத்த மழைவெள்ளம் ஏற்பட்டது. அப்போது முன்னணி நடிகர்கள் சிலர் நிதியுதவி அளித்தனர். இன்னும் சிலர் பொட்டலங்களில் சாப்பாடு வழங்கினர். ஒரு சிலர் தமிழக அரசிடம் நிவாரண நிதி வழங்கினர். இன்னும் சிலர், மழைவெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக மீட்க உதவினர்.

ஆனால் கேபிஒய் பாலா, தன்னிடம் வங்கி கணக்கில் இருந்த ரூ. 2 லட்சம் பணத்தை எடுத்து, 200 பேருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வீடு வீடாக தேடிச்சென்று கொடுத்தார். அடுத்தக்கட்டமாக சேமிப்பு சீட்டு பணமாக இருந்த ரூ. 3 லட்சம் ரூபாயை எடுத்து அதிலும் 140 பேருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் கொடுத்தார். மீதி பணத்தில் நைட்டீ, லுங்கி, பெட்ஷீட், பிஸ்கட், ரொட்டி, தண்ணீர் பாட்டில்களை வாங்கி கொடுத்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இந்த கேபிஒய் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்ற அவர், ஒரு கட்டத்தில் சினிமாவிலும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வருகிறார். இன்னும் பெரிய அளவில் சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த சூழலில் தனக்கு கலை நிகழ்ச்சிகள் மூலமாகவும், விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலமாகவும் கிடைக்கிற வருமானத்தை இப்படி மக்களுக்காக உதவுகிறார் பாலா. குறிப்பாக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள மலைக்கிராம மக்களுக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கித் தந்தவர் பாலா. இதுவும் தமிழக மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இப்போது அடுத்தக்கட்டமாக சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள அழகாபுத்தூர் பகுதியில் வாழும் மக்களுக்காக இலவச ஆட்டோ சேவையை துவங்கியுள்ளார் பாலா. இதற்காக ஒரு ஆட்டோவை வாங்கி அங்கு இலவசமாக ஓட விட்டுள்ளார். முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் பஸ்களில் ஏறி, இறங்கி சென்றுவர சிரமப்படுவதால், அவர்கள் ஆட்டோவில் இலவசமாக பயணிக்கும் வகையில் இந்த ஆட்டோ இலவச சேவையாக இயக்கப்படுகிறது.

இதுகுறித்து கேபிஒய் பாலா கூறுகையில், ஆட்டோவில் செல்ல அதிக காசு என்று ஒரு பெரியவரை, பஸ்சில் சிரமப்பட்டு ஏற்றி கூட்டிச் சென்றனர். ஆட்டோ வாடகை 250, 300 ரூபாய் என்பது அவர்களை பொருத்த வரை பெரிய காசுதான். மிடில் கிளாஸ் பேமிலியால், கஷ்டப்படுகிறவர்களால் அந்த தொகை கொடுத்து ஆட்டோவில் போக முடியாது. அதனால் பல்லாவரம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த ஆட்டோ இயக்கப்படும் என்று தெரிவித்தார். பாலாவின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சற்று முன்