- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரிஷா போனில் இருந்த சீக்ரட் விஷயங்கள் லீக் ஆனது எப்படி, என்ன மாதிரி வேலை எல்லாம்...

திரிஷா போனில் இருந்த சீக்ரட் விஷயங்கள் லீக் ஆனது எப்படி, என்ன மாதிரி வேலை எல்லாம் குந்தவை செஞ்சிருக்காங்க – இது வேற லெவலா இருக்கேப்பா!

- Advertisement -

நடிகை திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். கடந்த சில ஆண்டுகளாக நயன்தாராவுக்கு, திரிஷாதான் போட்டியாளராக பார்க்கப்படுகிறார். இப்போது திரிஷா சம்பளமும் ரூ. 10 கோடியை எட்டி விட்டதாக கூறப்படுகிறது.

விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் திரிஷா. ஆனால் ஒரு கட்டத்தில் அவரது மார்க்கெட் சரிவை சந்தித்தது. பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்து போனது. இனி திரிஷாவுக்கு மார்க்கெட் இல்லை என்ற நிலை ஏற்பட்ட போது மீண்டும் தனது இடத்தை திரிஷா பிடித்துக்கொண்டார்.

மன்மதன் அம்பு, 96 படங்கள் திரிஷாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தது. 96 படத்தில், ஜானு கேரக்டரில் திரிஷா வாழ்ந்திருந்தார். அதன்பிறகு கொடி படமும் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன்பிறகு பொன்னியின் செல்வன் குந்தவை கேரக்டரில் ரசிகர்களின் மனங்களை வசீகரித்தார் திரிஷா.

பொன்னியின் செல்வன் படம் பார்த்த ரசிகர்கள் பலரும், உயிர் உங்களுடையது தேவி என திரிஷாவுக்கு கமெண்ட் செய்ய துவங்கினர். அவர் சென்ற பிரமோ நிகழ்ச்சிகளிலும் அந்த வார்த்தைகளை சொல்லியே கூச்சலிட்டனர். மீண்டும் பழைய பார்ம்க்கு வந்த திரிஷா, இப்போது தக்லைப் படத்தில் மீண்டும் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இதற்கிடையே நடிகை திரிஷா போன் குறித்த சில சீக்ரெட் விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது அவரது போனில் ஹீரோக்கள் நம்பரை பெயருடன் சேவ் செய்வதில்லை. அதற்கு பதிலாக விஜய் என்றால் வி, தனுஷ் என்றால் டி, சியான் விக்ரம் என்றால் கென்னி, சிம்பு என்றால் சிம் இப்படித்தான் சேவ் செய்துள்ளார்.

இதற்கு காரணம், அவர் இல்லாத போது திரிஷா போனை யாராவது எடுத்து பார்த்தால், அந்த ஹீரோக்களின் எண்களை தெரிந்துக்கொள்வார்கள். இதனால் அவர்களது பிரைவசி பாதிக்கப்படுமே என்பதுதான். இதில் திரிஷாவிடம் 4 படங்களில் நடித்த அஜீத் நம்பர் மட்டும் திரிஷாவிடம் இல்லையாம். இந்த தகவலை சமீபத்தில் ஒரு நேர்காணலில் திரிஷாவே வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

சற்று முன்