நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம், கடந்த வாரத்தில் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் படக்குழுவுக்கு பலத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் தியேட்டர் தியேட்டராக சென்று ரசிகர்களை சந்தித்தாவது வசூலை சற்று அதிகரிக்கச் செய்யலாம் என சிவகார்த்திகேயன் முயற்சித்து வருகிறார்.
அயலான் படத்தை பொருத்தவரை, டெக்னிக்கலாகவும் விஎப்எக்ஸ் தொழில்நுட்பம் காரணமாகவும் படம் ஹாலிவுட் அளவுக்கு இருந்தாலும், கதையில் ஒரு ஒட்டுதல் ரசிகர்களுக்கு ஏற்படவில்லை. குறிப்பாக ஏலியனுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு இணைப்பும், புரிதலும் இல்லாமல் போய்விட்டது. அது மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக போய்விட்டது.
ஏற்கனவே இசையமைப்பாளர் இமான் விவகாரத்தில், சிவகார்த்திகேயன் பெயர் டேமேஜ் ஆன நிலையில், இந்த படம் பார்க்க பெண்கள் மத்தியில் அதிக ஆர்வம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு 50 சதவீத முதலீடு கூட திரும்ப கிடைக்காத நெருக்கடியான சூழல் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சமீபத்தில் சக நடிகர் ஒருவரை அசிங்கப்படுத்தும் விஷயமாக சிவகார்த்திகேயன் நடந்துக்கொண்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படி சக நடிகரான ஒருவரை சிவகார்த்திகேயன் இப்படி அசிங்கபடுத்தி இருக்க கூடாது என்று பலரும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
நடிகராவதற்கு முன்பு சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் பணிபுரிந்தவர். அது இது எது என்ற கேம் ஷோவை நடத்தியவர். அப்போது விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தவர் பிளாக் பாண்டி. அப்போதே இருவருக்கும் நல்ல பழக்கம் உண்டு. அங்காடித்தெரு, பூஜை, தெய்வத்திருமகள், சாட்டை, வேலாயும் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயனை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த பிளாக் பாண்டி, சிவா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று கூறியிருக்கிறார். அப்போது அவரை கண்டுக்கொள்ளாமல் போய்விட்ட சிவகார்த்திகேயன், பிறகு அவரது மேனேஜரிடம் பணம் கொடுத்து விட்டுள்ளார். அதை வாங்க மறுத்த பிளாக் பாண்டி, நான் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்கத்தான் நினைத்தேன். அவரிடம் பணம் கேட்கவில்லை. என் கை கால் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறேன். சிவகார்த்திகேயன் பணம் கொடுத்து விட்டது, என்னை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டது, என்று கூறியிருக்கிறார் பிளாக் பாண்டி.





