- Advertisement -
Homeபொழுதுபோக்குசென்னையில் நடந்த புத்தக கண்காட்சியில் பதிப்பாளர்களை கண்ணீர் விடச் செய்த இயக்குநர் மணிரத்னம்; மிக அருமையாக...

சென்னையில் நடந்த புத்தக கண்காட்சியில் பதிப்பாளர்களை கண்ணீர் விடச் செய்த இயக்குநர் மணிரத்னம்; மிக அருமையாக கைமாறு செய்து விட்டீர்கள் இயக்குநரே?

- Advertisement -

சினிமா, டிவி, மொபைல் போன், கம்ப்யூட்டர் வீடியோ கேம் என நேரத்தை போக்க நிறைய விஷயங்கள் இருந்தாலும் இன்னும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் மக்களிடையே இருக்கவே செய்கிறது. அதனால் முக்கிய நகரங்களில் 10 முதல் 12 நாட்கள் வரை ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த புத்தக கண்காட்சியில் பல கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகின்றன.

அந்த வகையில், நாட்டுடமையாக்கப்பட்ட பொன்னியில் செல்வன் நாவலுக்கு எப்போதுமே அபரிமிதமான வரவேற்பு வாசகர்கள் மத்தியில் உண்டு. அதனால் புத்தக கண்காட்சியில் ஏராளமான வாசகர்கள் பொன்னியின் செல்வன் நாவல் 5 தொகுதிகளை தவறாமல் வாங்கி செல்வர். வாசகர்கள் வசதிக்காக ரூ. 500 முதல், ரூ. 3000 வரை தரமான முறையில் அச்சடிக்கப்பட்டு இந்த நாவல் விற்பனைக்கு வைக்கப்படுகிறது.

சென்னையில் இந்த முறை நடந்த புத்தக கண்காட்சியில் பொன்னியின் செல்வன் புத்தகங்களை வாங்க வாசகர்கள் மத்தியில் ஆர்வமே இல்லை. வழக்கமான கண்காட்சி நடக்கும் பத்து நாட்களில் ஒவ்வொரு அரங்கிலும் 100 முதல், 200 வரை இந்த பொன்னியின் செல்வன் புத்தகங்கள் விற்பனையாகும். இப்படி மொத்தமாக பல ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாகும்.

ஆனால் இந்த முறை சில பிரதிகள் கூட விற்கவில்லை என்று புத்தக விற்பனையாளர்களும், பதிப்பக உரிமையாளர்களும் கண்ணீர் விடாத குறையாக கூறி வருகின்றனர். ஆண்டுதோறும் ஒரு லட்சம் பிரதிக்கு மேல் விற்பனையான பொன்னியின் செல்வன் 2 ஆண்டுகளாக 5 ஆயிரம் பிரதிகள் கூட விற்பது இல்லை என்று கூறுகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம்தான் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் கடந்த 1950 முதல் 1954 வரை 5 ஆண்டுகள், கல்கி வார இதழில் ஒவ்வொரும் வாரமும் வெளியானது. சஸ்பென்ஸ் நிறைந்த, மிக அம்சமான கதையை கல்கி எழுதியிருந்தார். அதனால் வாசகர்கள் காத்திருந்து, காத்திருந்து பொன்னியின் செல்வனை படித்து ரசித்தனர்.

இப்போதும் 5 தொகுதிகளையும் மொத்தமாக வாங்கி, மீண்டும் மீண்டும் படித்து ரசிக்கின்றனர். 70 ஆண்டுகள் ஆன நிலையிலும், பொன்னியின் செல்வன் இப்போது படித்தாலும் அதில் வரும் கதை மாந்தர்களும், காட்சிகளும், சம்பவங்களும் வியப்பை ஏற்படுத்தும். படிக்கும் ஆர்வத்தை தூண்டும். ஆனால் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் என்ற மோசமான படைப்பின் காரணமாக, இந்த நாவலை வாங்கி படிக்கும் ஆர்வமே வாசகர்களிடம் இருந்து போய்விட்டது. ஏனெனில் அந்த படத்தில் நாவலின் கிளைமேக்ஸ்சையே மாற்றியிருந்தார். அந்த அற்புதமான நாவலை எழுதிய கல்கிக்கு, சொதப்பலான படத்தை எடுத்து மணிரத்னம் மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என்றும் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

சற்று முன்