- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் சிம்புவை வரச் சொல்லிடுங்க, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன் இமேஜை குறைத்துக் கொண்டாரா கமல் -...

மீண்டும் சிம்புவை வரச் சொல்லிடுங்க, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன் இமேஜை குறைத்துக் கொண்டாரா கமல் – ரசிகர்களின் கோரிக்கையை ஏற்பாரா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறார். எம்ஜிஆர் சிவாஜி போல, இப்போது வாழும் சகாப்தங்களாக ரஜினி, கமல் இருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல. ஏனெனில், இருவருமே புகழின் உச்சியை ஏற்கனவே தொட்டு விட்டவர்கள்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார், வரவேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. ஆனால் இதோ அதோ என ரசிகர்களுக்கு போக்கு காட்டிய ரஜினி, கடைசி வரை அரசியல் கட்சி துவங்கவில்லை. தமிழகத்தில் புரட்சி வெடித்தால், நான் அரசியலுக்கு வருகிறேன் என்றார். கடைசியில் நாடு முழுவதும் கொரோனா தொற்றுதான் பரவியது.

- Advertisement -

ஆனால் யாருமே எதிர்பார்க்காத நிலையில் திடீரென அரசியல் கட்சியை துவங்கினார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை மதுரை மாநாட்டில் அறிவித்தார். தொடர்ந்து அரசியல் தலைவராக தேர்தல்களை சந்தித்து வருகிறார். கடந்தமுறை கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.

எனினும் கமல்ஹாசன் ஒரு முக்கியமான அரசியல் தலைவராகவே, கட்சியினரிடையே மதிக்கப்படுகிறார். சரத்குமார், கார்த்திக் போல, பெயருக்கு கட்சி நடத்தாமல், முழு அளவில் கட்சி பணிகளை முடுக்கி விடுகிறார். கட்சி நிர்வாகிகளை சந்தித்து அடிக்கடி ஆலோசனை நடத்துகிறார். இத்துடன் சினிமாவிலும் எப்போதுமே பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில், விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஏழு ஆண்டுகளாக நடத்திக்கொண்டு இருக்கிறார். இப்போது பிக்பாஸ் 7 சீசன் நடந்துக்கொண்டு இருக்கிறது. வாரந்தோறும் சனி, ஞாயிறு தினங்களில் கலந்துக்கொள்ளும் நிலையில், கமல் குறித்து தாறுமாறான விமர்சனங்கள் வருகின்றன.

பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களை கமலையே பேசுபொருளாக வைத்து கலாய்க்கின்றனர். அவர் ஒரு பெரிய நடிகர் என்ற இமேஜை மறந்து, அந்த போட்டியாளர்கள், அவரும் நம்மை போல சம்பளம் பெறுகிற ஒரு தொகுப்பாளர்தானே என நினைப்பதால், இனியாவது அந்த நிகழ்ச்சியை சிம்பு தொடரட்டும். நீங்கள் வந்துவிடுங்கள் என கமல் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகினறனர். பிரதீப் ஆண்டனி வெளியேற்றத்திலும் கமல் கடுமையான விமர்சிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்