தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். விஜய் டிவியில் இருந்து, சினிமாவில் நடிக்க வந்த சிவகார்த்திகேயன், மிக குறுகிய காலத்தில் தனது நடிப்பாலும், திறமையாலும் முன்னிலைக்கு வந்தார்.
குறிப்பாக அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், ரெமோ, காக்கிச்சட்டை, நம்ம வீட்டுப்பிள்ளை, டாக்டர், மாவீரன் உள்ளிட்ட படங்களின் வெற்றியால் அவரது இமேஜூம், சம்பளமும் பலமடங்கு உயர்ந்தது. அவர் நடித்த படங்களுக்கு பேமிலி ஆடியன்ஸ் கூட்டமும் பலமடங்கு அதிகரித்தது.
சூர்யா, சியான் விக்ரம், கார்த்தி, தனுஷ் வரிசையில் சிவகார்த்திகேயனும் முன்னிலைக்கு வந்த நிலையில், இசையமைப்பாளர் டி இமான் சொன்ன அந்த குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டது. அதுகுறித்து எவ்வித பதிலும், மறுப்பும், விளக்கமும் சொல்லாததால் சிவகார்த்திகேயன் மீதிருந்த ரசிகர்களின் இமேஜ் 50 சதவீதத்துக்கு மேல் காணாமல் போனது.
தமிழக ரசிகர்களை பொருத்த வரை ஒரு நடிகர் நடிப்பில் பெரிய திறமை இல்லாவிட்டாலும், ஒழுக்கத்தில், நல்ல பண்புகளில் முன்னிலையில் இருந்தால் மட்டுமே, அவர்களது ஓரிரு படங்கள் ஓடா விட்டாலும், அவர்களை வெறுக்க மாட்டார்கள். ஆனால் கேரக்டர் மோசம் என்ற ஒரு பெயர் ஏற்பட்டால் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அந்த களங்கத்தை துடைத்து நல்ல பெயர் எடுக்க முடியாது.
இந்த சூழலில்தான் அயலான் படம் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. படம் முழுக்க துப்பாக்கி சத்தம், வன்முறை என்று இருக்கும் கேப்டன் மில்லர் தனுஷ் படத்துக்கு கிடைத்த வரவேற்பு கூட சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கவில்லை. இதற்கிடையே அயலான் பட தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேூக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே மனஸ்தாபமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது உடல் நலம் பாதித்த நிலையில் அயலான் படத்தின் தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இதுவரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரை போனில் அழைத்து நலம் விசாரிக்கவில்லை. நேரில் சென்றும் பார்க்கவில்லை. கடைசியாக அவரது தயாரிப்பில் வந்த அயலான் படம்தான் இப்போது திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படியும் சிவகார்த்திகேயன் பண்பின்றி நடந்துக்கொள்ளலாமா, என அவரது ரசிகர்களே வருத்தப்பட்டு வருகின்றனர்.





