- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தும் நான் டைரக்ட் செய்யவில்லை, அதற்கு ரஜினிதான் காரணம் -...

விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தும் நான் டைரக்ட் செய்யவில்லை, அதற்கு ரஜினிதான் காரணம் – பல ஆண்டுகளுக்கு பிறகு கேஎஸ் ரவிக்குமார் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார். குறிப்பாக ரஜினிகாந்த் கமல்ஹாசன் சரத்குமார் நடித்த பல வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். சமீபகாலமாக ஹீரோக்களுக்கு அப்பாவாகவும் குணச்சித்திர வேடங்களிலும் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியதாவது, நான் விஜய் நடித்த மின்சார கண்ணா படத்தை டைரக்ட் செய்தேன். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை. படையப்பா படத்தில் வரும் மின்சார கண்ணா பாடல் வரியை தான் இந்த படத்துக்கு டைட்டிலாக வைத்திருந்தோம்.

- Advertisement -

மின்சார கண்ணா படம் பெரிய வெற்றி பெறாததற்கு காரணம் துள்ளாத மனமும் துள்ளும் படத்துக்கு அப்புறம் விஜய் நடித்த படம் அது. அதே போல் படையப்பா படத்துக்கு பிறகு நான் இயக்கிய படம் அது. அதனால் அந்த படங்களுக்கு பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற படமாக இது அமையாததுதான் முக்கிய காரணம்.

ஆனால் இந்த படத்தில்தான் விஜய் காமெடி நடிப்பை நன்றாக செய்திருந்தார் என்று எனக்கு தோன்றியது. ஏனென்றால் அந்த படத்தில் காமெடி காட்சியில் நடிப்பதற்கான அதிக ஸ்கோப் இருந்தது. அந்த படத்துக்கு பிறகு மீண்டும் நான் விஜய் படம் எதையும் டைரக்ட் செய்யவில்லை. ஆனால் அவருக்கும் எனக்கும் நெருக்கமான நட்பு பழக்கம் உள்ளது. என் வீட்டுக்கு பலமுறை வந்திருக்கிறார்.

- Advertisement -

மின்சார கண்ணா படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. அப்போது ரஜினி நடித்த ராணா படத்தை நான் டைரக்ட் செய்ய வேண்டி இருந்தது. ஆனால் உடம்புக்கு சரியில்லாமல் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

அவர் எப்போது திரும்பி வருவார், வந்தாலும் ஷூட்டிங்குக்கு எப்போது வருவார் என்பது தெரியாது. அந்த சூழலில் நான் விஜய் படத்தை டைரக்ட் செய்ய போனால் பணத்துக்கு ஆசைப்பட்டு போய்விட்டான் என்று என்னை மோசமாக விமர்சனம் செய்வார்கள் என்பதால் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை தவிர்த்து விட்டேன் என்று இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்