- Advertisement -
Homeபொழுதுபோக்குசிஎம் கேரவன்ல இருக்காரு, சிஎம் வந்துட்டு இருக்காருன்னு தான் ஷூட்டிங் ஸ்பாட்டுல நடிகர் தனுஷை சொல்லுவாங்க...

சிஎம் கேரவன்ல இருக்காரு, சிஎம் வந்துட்டு இருக்காருன்னு தான் ஷூட்டிங் ஸ்பாட்டுல நடிகர் தனுஷை சொல்லுவாங்க – பிரபலம் போட்டுடைத்த உண்மை!

- Advertisement -

பொதுவாக கிராமப்புறங்களில் பேசும் போது ஆசை யாரை விட்டது என்று சொல்வது வழக்கம். அது நடிகர் தனுஷூக்கு மிக சரியாக பொருந்துகிறது. அதாவது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்து விட்டார். முதல்வராகி விட்டார். இதை பார்த்த சில நடிகர்களுக்கு அடுத்த முதல்வர் நான்தான் என்ற ஒரு நம்பிக்கை வந்து விட்டது.

அண்ணாதுரை எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி போன்றவர்கள் வகித்த முதலமைச்சர் பதவியில் இன்று நடிகர் விஜய் இருப்பதை பார்த்த பிறகு அரசியலுக்கு வந்தால் நாமும் அடுத்த முதல்வர் ஆகிவிடலாம் என்கிற ஆசை சில நடிகர்களுக்கு வந்திருப்பதை கண்கூடாக காண முடிகிறது. குறிப்பாக நடிகர்கள் ராகவா லாரன்ஸ் தனுஷ் விஷால் என சிலர் அரசியல் களத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

தளபதி விஜய் அளவுக்கு மக்கள் மத்தியில் இவர்களுக்கு செல்வாக்கும் வரவேற்பும் இருக்கிறதா என்றால் அதற்கு இல்லை என்பது தான் உண்மையான பதிலாக இருக்க முடியும். விஜய்க்கு இருக்கிற மாஸ்சும் மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கிற செல்வாக்கும் தனுஷ் விஷால் ராகவா லாரன்ஸ் போன்றவர்களுக்கு பாதி கூட இல்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் அரசியலுக்கு வந்தே தீருவது என்ற முடிவில் அவர்கள் இருக்கின்றனர்.

அதிலும் அடுத்த முதல்வர் என்ற கனவில் நடிகர் தனுஷ் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய அவர் மேடையில் பேசிய பேச்சும் அவர் காட்டிய ஆட்டிட்டும் தமிழக மக்களை எரிச்சலடைய செய்திருக்கிறது. இதற்கிடையே அவர் கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் தனுஷ் சிஎம் ஆக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தனுஷை சிஎம் என்றுதான் சொல்ல சொல்லியிருக்காங்க. அவர் படப்பிடிப்புல கேரவன்ல இருந்தாருன்னா சிஎம் கேரவன்ல இருக்காரு, சிஎம் வந்துட்டு இருக்காருன்னுதான் அவரோட அசிஸ்டென்ஸ் எல்லாம் சொல்வாங்க.

அதே மாதிரி அவரும் அவருக்கு கீழே இருக்கிற ஆளுங்களை எல்லாம் அந்த அமைச்சர் இந்த அமைச்சருன்னு பேர் சொல்லி கூப்புடறதுதான் வழக்கமாக இருந்துச்சு. இது ரொம்ப காலமாக நடந்துட்டு இருந்துச்சு. இது கிட்டதட்ட மூணு நாலு வருஷசமா இப்படிதான் நடந்துட்டு இருக்குது என்று அந்தணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்