நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் மரணமடைந்தார். உடல்ல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அது மட்டுமல்லாமல், விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்று அவருக்கு மரியாதை செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடியும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் ஒரு கட்டுரையையும் அவர் வெளியிட்டார். இந்த நிலையில், மத்திய அரசின் பத்மபூஷன் விருது விஜயகாந்த் க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கலை இலக்கியம் நாடகம் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருது வழங்கிய கவுரவித்து வருகிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் மொத்தம் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்திய சினிமாவில் மிகச்சிறந்த நடன கலைஞரான வைஜெயந்தி மாலாவிற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிறந்து வளர்ந்த அவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். நாட்டிய கலைஞரான பத்மா சுப்பிரமணியம் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். அவருக்கு மத்திய அரசு பத்ம விபூஷன் விருதை வழங்கி கௌரவ படுத்தியிருக்கிறது. இவர் ஏற்கனவே பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் ஆகிய இரண்டு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
கோவையைச் சேர்ந்த வள்ளி கும்மி நடன கலைஞரான பத்திரப்பனுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாஸ் விளையாட்டு வீராங்கனையான ஜோஸ்னா சின்னப்பாவும், பத்மஸ்ரீ விருதை பெறுகிறார். எழுத்தாளர் ஜோ டி குரூஸ், நாதஸ்வர கலைக்கிறான சிவலிங்கம் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 17 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாடகி உஷா உதூப் உள்ளிட்டோருக்கும் பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விருது பெற்றவர்களுக்கு இணையதளத்தில் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.





