- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் பஞ்சாயத்தை கிளப்பிய நடிகர் சிம்பு, அப்செட் ஆன தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் - எல்லாம்...

மீண்டும் பஞ்சாயத்தை கிளப்பிய நடிகர் சிம்பு, அப்செட் ஆன தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் – எல்லாம் அந்த 2 ஹீரோக்களால் வந்த பிரச்னை தானாம்!

- Advertisement -

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை விட அவரால் ஏற்படும் பஞ்சாயத்துகள் தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில்தான் தக்லைப் படப்பிடிப்பில் நேரந்தவறாமையை கடைபிடித்து, நல்ல முறையில் நடந்துக்கொண்டார். இயக்குனர் மணிரத்னத்துக்கு சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார் என்று சினிமா விமர்சகர்கள் பாராட்டினர்.

அவர்கள் பேசிய வார்த்தைகளின் ஈரம் கூட காயாத நிலையில், இப்போது மீண்டும் சிம்பு குறித்த பிரச்னை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சிம்பு கடைசியாக நடித்த படம் மாநாடு. அதற்கு பின்பு வந்த பத்துதல படம் சரியாக ஓடவில்லை. ஈஸ்வரன் படமும் சொதப்பி விட்டது. தக்லைப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது.

- Advertisement -

இந்த சூழலில், ஏற்கனவே வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிக்க நடிகர் சிம்பு சில ஆண்டுகளுக்கு முன்பே கமிட் ஆகி விட்டார். இதற்கான அந்நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் சில கோடிகளும் அட்வான்ஸ் வாங்கிய நிலையில், அந்த படத்தில் சிம்பு நடிக்கவே இல்லை. இந்த பிரச்னை கோர்ட் வரைக்கும் சென்று, இப்போது அந்த வழக்கும் வாபஸ் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு மீண்டும் அந்த படத்தில் நடிப்பதாக உறுதிமொழி அளித்த நிலையில், கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வாபஸ் பெற்ற நிலையில், இப்போது மீண்டும் பழையபடி முரண்டு பிடிக்க ஆரம்பித்திருக்கிறார் நடிகர் சிம்பு. அதனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பயங்கர அப்செட்டில் உள்ளார்.

- Advertisement -

அதாவது நடிகர் தனுஷ், தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்து வருகிறார். அவரே சில படங்களை இயக்கியும் நடிக்கிறார். அந்த வகையில் அவரது சம்பளம் ஒரு படத்துக்கு ரூ. 50 கோடியாக உள்ளது. அதே போல் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அமரன் என்ற மெகாஹிட் படத்தை சமீபத்தில் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து ஏஆர் முருகதாஸ், சுதா கொங்கரா போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிப்பதால் அவரது சம்பளமும் ரூ. 65 கோடி வரை உயர்ந்துள்ளது. தனுஷ், சிவகார்த்திகேயன் சம்பளம் போல் தனது சம்பளமும் ரூ. 50 கோடிக்கு மேல் உயர்த்தி தருமாறு, சிம்பு திடீரென நெருக்கடி தந்திருக்கிறார். அவர்கள் வெற்றிப் படங்களை தருவதால், சம்பளம் கணிசமாக உயர்கிறது. இவர் படங்களில் நடிப்பதே அபூர்வமாக உள்ள நிலையில், அதிக சம்பளத்தை எதிர்பார்க்கலாமா என சிம்பு ரசிகர்களே புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்