நடிகர் ரஜினிகாந்த் இப்போது தனது 170வது படம் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். இன்னும் இரண்டு மாதங்களில் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.
இதற்கிடையே ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். லைக்கா புரடக்சன் இந்த படத்தை தயாரித்துள்ளது.
சென்னையில் நேற்று நடந்த லால் சலாம் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். அவர் பேசுகையில், விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். அவருக்கு நான் போட்டி என்றோ, எனக்கு அவர் போட்டி என்றோ சொல்வது கவுரவம் அல்ல. எனக்கு நான்தான் போட்டி, விஜய்க்கு விஜய்தான் போட்டி. நான் சொன்ன காக்கா, கழுகு கதையை வேறுமாதிரி மாற்றிவிட்டனர், என பல விஷயங்களை பேசியிருந்தார் ரஜினிகாந்த்.
இதற்கு பதிலடி தரும் விதமாக ப்ளு சட்டை மாறன் டிவிட் செய்து, ரஜினிக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார். காக்கா கழுகு கதையை ஆரம்பிச்சதே நீங்கதான். பட்டத்தை பறிக்க 100 பேருன்னு பாடி புலம்பினதும் நீங்கதான். உங்க படத்துக்கு நீங்கதான் போட்டி. ஏன்னா, மத்த படங்கள் உங்க படத்தோட போட்டி போட தியேட்டர்கள் கிடைப்பதில்லையே, அப்படி ஒரு சான்ஸ் வந்தப்ப, பேட்ட படத்தை விஸ்வாசம் படம் வசூலில் போட்டு தள்ளினது எல்லாம் மறக்க முடியுமா என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும் தொடர்ச்சியாக டிவீட் போட்டுள்ள ப்ளு சட்டை மாறன், இவர் மீண்டும் மீண்டும் விஜய் பற்றி மேடையில் பேசுகிறார். இதில் இருந்தே இவருக்கு விஜய் என்றால் பயம் என்று தெளிவாக தெரிகிறது. இவரை போல 25 ஆண்டுகள் மாவு அரைத்துவிட்டு, கட்சி ஆரம்பிக்கிறேன் என்று ஏமாற்றவில்லை விஜய்.
இப்போது விரைவில் கட்சி ஆரம்பிக்கும் வேலையை துவங்கி விட்டார் விஜய். எதிர்காலத்தில் விஜய் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தால், தலை சுற்றி கீழே விழுந்துவிடுவார். எந்நேரமும் உங்களுக்கு விஜய் நினைப்புதானா, கூல்டவுன் சார் என கிண்டலடித்துள்ளார் ப்ளு சட்டை மாறன். இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், ரஜினி ரசிகர்களை கடுப்படையச் செய்துள்ளது.





