- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அந்த விஷயத்தில் நிறைய தண்ட செலவு செய்துவிட்டேன், பகிரங்கமாக வருத்தப்பட்ட நடிகை சமந்தா -...

நான் அந்த விஷயத்தில் நிறைய தண்ட செலவு செய்துவிட்டேன், பகிரங்கமாக வருத்தப்பட்ட நடிகை சமந்தா – கடைசியில் இப்படி ஃபீல் பண்ண வெச்சுட்டாங்களே?

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சமந்தா. தமிழில் தெறி கத்தி ஈ தங்கமகன் அஞ்சான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். கடந்த 2017ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டில் கணவரை பிரிந்தார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா, மயோசிடிஸ் எனப்படும் தோல் அலர்ஜி நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பல மாதங்களாக அந்த நோய்க்கு அவர் பலவிதமான மருத்துவ சிகிச்சைகளை பெற்று வரும் நிலையில், இன்னும் அந்த பாதிப்பில் இருந்து அவர் மீளவில்லை. எனினும் சிரமத்தை பொருட்படுத்தாது படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அடுத்த மாதம் ஐதராபாத்தில் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சோபிதா துலிபாலா, பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை திரிஷாவுக்கு தோழியாக வானதி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

நடிகை சமந்தா நடித்து சமீபத்தில் வெளிவந்த வெப் சீரியல் சிட்டாடல் ஹனி பன்னி. இந்த வெப் சீரியல் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக ரேப்பிட் பயர் என்ற கேள்வி பதில் வீடியோ ஒன்றை அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் நடிகர் வருண் தவான், நடிகை சமந்தாவிடம் கேள்வி கேட்டு அவர் பதில் சொல்வது போல் அந்த வீடியோ அமைந்திருந்தது.

- Advertisement -

அதில் நடிகர் வருண் தவான் சமந்தாவிடம், உங்களது அபத்தமான செலவு, முற்றிலும் பயனற்ற செலவாக நீங்கள் கருதுவது எது என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சமந்தா, எனது முன்னாள் கணவருக்காக வாங்கிய விலை உயர்ந்த பரிசுகள் என்று பதிலளித்தார். அதற்காக செலவிட்டது எவ்வளவு தொகை என்று வருண் மீண்டும் கேட்கிறா.ர் அதற்கு சமந்தா, நிறையவே என்று பதிலளிக்கிறார். தொடர்ந்து அதுபற்றி பேச விரும்பாத சமந்தா, உடனே அடுத்த கேள்விக்கு போய் விடுவோம் என்றும் கூறுகிறார்.

என் கணவருக்காக தண்ட செலவு செய்தேன் என்று நடிகை சமந்தா கூறும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அடுத்த மாதம் நாக சைதன்யா 2வது திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், அதற்காகவே இப்படி ஒரு பதிலை கோபமாக சமந்தா அளித்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்