- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்த திருமணத்துக்கு தயாராகி விட்டேன், அந்த நிறத்தில் எனக்கு கணவர் தேடிக்கொண்டு இருக்கிறேன் - பகிரங்கமாக...

அடுத்த திருமணத்துக்கு தயாராகி விட்டேன், அந்த நிறத்தில் எனக்கு கணவர் தேடிக்கொண்டு இருக்கிறேன் – பகிரங்கமாக பேசிய வனிதா விஜயகுமார்

- Advertisement -

புலவர்களுக்குள் சண்டையும் சர்ச்சையும் பிரிக்க முடியாதது என்று, திருவிளையாடல் படத்தில் சிவாஜி நடித்த அரசவை காட்சியில் ஒரு வசனம் வரும். அதுபோல், வனிதா விஜயகுமாரையும் சர்ச்சையையும் பிரிக்க முடியாது என்று அவர் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.

துவக்கத்தில், தந்தை விஜயகுமாருடன் ரோட்டில் பல பேர் முன்னிலையில் அவர் சண்டையிட்டு பிரச்னை செய்தார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. பின் கணவருடன் ஏற்பட்ட பிணக்குகளும் வெளிச்சத்துக்கு வந்து கடும் விமர்சனங்களை சந்தித்தார்/.அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டும், பல பிரச்னைகளை செய்து, மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசபட்டார்.

அதுமட்டுமின்றி எப்போது நேர்காணல் செய்தாலும் அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில், சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி விடுவார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் இவரது விமர்சனத்தில் இருந்து தப்பவில்லை. மேலும் பிறந்த நாள் பரிசாக நடிக்க வாய்ப்பு கேட்டால், கட்டிப்பிடித்து கமல் முத்தம் கொடுத்தார் என்றும் பரபரப்பை கிளப்பி விட்டார்.

வனிதா விஜயகுமாரின் முதல் திருமணம் விவாகரத்தான நிலையில், சில ஆண்டுகளுக்கு பின் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு பிரிந்து விட்டார். அவரும் ஏற்கனவே திருமணமானவர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட அவரும் பிரிந்து விட்டார். அதன்பிறகு உடல்நலக்குறைவால் பீட்டர்பால் இறந்து விட்டார்.

சமீபத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா பங்கேற்றார். மகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி குறித்து தினமும் ரிவ்யூ செய்தார் வனிதா விஜயகுமார். அப்போது ரெட்கார்டு கொடுத்து வௌியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி குறித்து பேசியதாக, நள்ளிரவில் ஒருவர் தன்னை கடுமையாக தாக்கியதாக, கன்னத்தில் காயங்களுடன் வீங்கி முகத்துடன் புகைப்படத்தை வெளியிட்டார் வனிதா. அது பயங்கரமான வைரலானது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணல் பங்கேற்ற வனிதா விஜயகுமார் திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், நான் இதுவரை 2 முறை திருமணம் செய்து சட்டப்படி விவகாரத்து பெற்றவள். 3வது திருமணமும் செய்வேன். 3வது திருமணம் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறது. இனி வருகிற கணவர் கருப்பா, சிவப்பா இருக்க கூடாது. பச்சையாக இருக்கணும். குபேரன் மாதிரி பச்சையாக இருக்கணும் என்று கூறியிருக்கிறார் வனிதா விஜயகுமார். இது சாதாரணமான பதிலா, கடுப்பில் சொன்ன பதிலா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சற்று முன்