நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்து வெளிவரும் படம் லால் சலாம். வரும் பிப்ரவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை பொருத்தவரை, கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்திருந்தாலும் படம் முழுவதும் அவர் வருவது போலவே காட்சிகளை திட்டமிட்டு எடுத்துள்ளனர்.
அதனால் இது முழுக்க முழுக்க ரஜினி படம் பார்த்த திருப்தியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும். ஏனெனில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவருமே வளர்ந்து வரும் நடிகர்களாக தான் இருக்கின்றனர், விஷ்ணு விஷால் சில வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் விக்ராந்த் நடித்து எந்த படமும் பெரிய வெற்றிப்படமாக இதுவரை இருந்தது இல்லை.
அதனால் லால் சலாம் படத்தை பொருத்தவரை ரஜினியின் ஆணிவேரே ரஜினிகாந்த் தான். அதனால்தான் கேரளாவில் ரூ. 16 கோடிக்கு ஜெயிலர் படத்தை வாங்கிய நிலையில், லால் சலாம் படத்தை ரூ. 15 கோடி வரை வாங்கியுள்ளனர். அப்படி எனில் இந்த படம் ரஜினி படமாக தான் வியாபாரம் ;நடந்து வருகிறது.
லால் சலாம் படத்தை பொருத்தவரை மொய்தீன் பாய் கேரக்டர் ரஜினிக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்றுத் தரும். அவார்டு தரும் அளவுக்கு அந்த கேரக்டர் இருப்பதாக ஐஸ்வர்யா கூறியதாக ஏற்கனவே ரஜினிகாந்த் கூறிய நிலையில், நிச்சயம் வலுவான ஒரு கேரக்டராக அது இருக்கும் பட்சத்தில் ரஜினியின் மாஸ் நடிப்பே லால் சலாமை வெற்றிப் படமாக மாற்றிவிடும்.
அடுத்து வரும் வேட்டையன் படம், வெற்றி பெறுவது உறுதி என்றாலும், அதற்கடுத்த ரஜினி 171 படம் குறித்துதான் பலரும் சற்று கலக்கத்தில் உள்ளனர். ஏனெனில் வன்முறை, துப்பாக்கி சத்தம், ரத்தம், போதைப் பொருள் என இந்த விஷயங்களை தாண்டி சிந்திக்க தெரியாதவர் டைரக்டர் லோகேஷ் கனகராஜ், அவரது இந்த படைப்பு தன்மை குறித்து விஜய் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் உட்பட பலரும் ஏற்கனவே பலமுறை வெச்சு செய்துள்ளனர்.
அதனால் ரஜினி 171 படத்தில், இந்த போதைப் பொருள், டிரக் ப்ரீ சொசைட்டி என்ற வார்த்தைகளே இருக்க கூடாது. உங்களது கதைக்களத்தில் இருந்து இது முற்றிலும் வேறுபட்ட மாறுபட்ட களமாக இருக்க வேண்டும். விஜயை வெச்சு செஞ்சது போல, ரஜினி மாஸ்சை கெடுத்து விடாதீர்கள் என, தயாரிப்பாளர் தரப்பிலும், ரஜினி தரப்பிலும் சிலர் ஸ்டிரிக்ட் ஆக அட்வைஸ் செய்துள்ளனர். லியோ படம் குறித்து இப்படி மோசமான விமர்சனம் வரும் என்று முன்பே தெரிந்திருந்தால், லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் நடிப்பது குறித்து, ரஜினி சற்று யோசித்திருப்பார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.





