- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் கட்சி பெயர் அறிவிப்பால் காணாமல் போன நடிகர் சிம்பு - இன்னிக்கு சிம்பு...

நடிகர் விஜய் கட்சி பெயர் அறிவிப்பால் காணாமல் போன நடிகர் சிம்பு – இன்னிக்கு சிம்பு பிறந்த நாள், அதைக் கூட அவங்க யோசிக்கலையா?

- Advertisement -

நடிகர் விஜய் நேற்று திடீரென தமிழக வெற்றி கழகம் பெயரில், ஒரு திடீர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி துவங்க இருப்பதாகவும், அதற்காக இந்திய தேர்தல் தலைமை ஆணையத்தில் விண்ணப்பம் செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தவும், மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லவும் கட்சி துவங்கியதற்கான காரணத்தை சொன்ன அவர், நாடாளுமன்ற தேர்தலில் தங்களது கட்சி போட்டியிடாது எனவும், தங்களது ஆதரவு யாருக்கும் கிடையாது எனவும் அறிவித்தார்.

- Advertisement -

விஜய் அரசியலுக்கு வர இருப்பதாக, சில ஆண்டுகளாக அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில், அவரும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சில மாதங்களுக்கு ஒரு முறை அழைத்து நேரில் ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டே இருந்தார். அதனால் அரசியலுக்கு வருவார் போல தெரிகிறது என்றும் பலர் கூறிக்கொண்டு இருந்தனர்.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் போல, புரட்சி வெடித்தால் வருகிறேன், தமிழக மக்கள் ரஜினிதான் முதலமைச்சர் என்று நடுரோட்டில் நின்று போராட்டம் நடத்தினால் வருகிறேன் என்று பேசி ஏமாற்றியதை போல இல்லாமல், எதுவுமே முன்கூட்டி சொல்லி பில்டப் செய்யாமல் சட்டென தனது அரசியல் வரவை அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.

- Advertisement -

இந்த சூழலில் நேற்று நடிகர் விஜய் நேற்று முற்பகலில் தனது கட்சி அறிவிப்பை வெளியிட்டார். அந்த நேரத்தில்தான் நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் சிம்பு 48 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. ஆனால் விஜய் கட்சி துவங்கிய விஷயம் வைரலானதால், சிம்புவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் யாருடைய பார்வைக்கும் வராமல் காணாமலேயே போய் விட்டது.

இன்று பிப்ரவரி 3ம் தேதி சிம்புவின் பிறந்த நாள். நேற்று பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு, விஜய் டிரண்டிங் ஆனதால் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இன்று சிம்பு பிறந்த நாளை காரணமாக காட்டி, இன்று மீண்டும் ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரை அந்த படக்குழு வெளியிட்டு இருக்கலாம். சிம்பு ஹீரோ – வில்லன் என 2 கேரக்டரில் நடிப்பதால், நிச்சயம் அந்த போஸ்டரை இன்று வெளியிட்டிருந்தால் செம வைரலாகி இருக்கும். இதைக்கூட அந்த படக்குழு யோசிக்கவில்லையே என, சிம்பு ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்