- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமார் என்னை பார்த்து சொன்ன அந்த வார்த்தைகள், அமரன் இசை வெளியீட்டு விழாவில் பகிரங்கமாக...

நடிகர் அஜீத்குமார் என்னை பார்த்து சொன்ன அந்த வார்த்தைகள், அமரன் இசை வெளியீட்டு விழாவில் பகிரங்கமாக சொன்ன நடிகர் சிவகார்த்திகேயன் – அட தல மனசுல கூட அப்படி ஒரு நெனப்பு இருக்குதா?

- Advertisement -

சினிமாவில் சாதிக்க நினைப்பவர்களுக்கு நல்ல கதைகள், நல்ல கேரக்டர்கள் கொண்ட படங்கள் அமைவது மட்டுமல்ல, நேரமும் காலமும் அதிர்ஷ்டகரமான சூழ்நிலையும் சேர்ந்து வந்தால் மட்டுமே சினிமா வாழ்க்கையில், அந்த பயணத்தில் பெரிய அளவில் சாதனைகளை நிகழ்த்த முடியும். சிறந்த நடிப்பு திறமையும், ஆற்றலும் இருந்தாலும் அதற்கான நேரம் சரியாக அமைந்தால் மட்டுமே ஒருவரால் குறுகிய காலத்தில் பெரிய வளர்ச்சியை எட்ட முடியும்.

அதற்கு தமிழ் சினிமாவில் சமீபத்திய உதாரணமாக நடிகர் சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு சொல்லலாம். விஜய் டிவியில் அது இது எது என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன், ஒரு கட்டத்தில் சினிமா நட்சத்திரங்களை நேர்காணல் செய்தார். சினிமா விருது வழங்கும் விழாக்களை தொகுத்து வழங்கினார்.

- Advertisement -

அதன் பிறகு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அதன்பிறகு அவர் நடித்த மனம் கொத்திப் பறவை, எதிர்நீச்சல், ரெமோ, ரஜினிமுருகன், காக்கிச்சட்டை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், வேலைக்காரன், நம்ம வீட்டு பிள்ளை, சீமராஜா உள்ளிட்ட பல படங்கள் அவரை முன்னணி நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் உயர்த்தியது.

இப்போது சிவகார்த்திகேயன் நடித்த 22 வது படம் அமரன் வருகிற 31ம் தேதி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்திருக்கிறார். மறைந்த தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

- Advertisement -

அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சாய்ராம் கல்லூரியில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் அஜீத் குமார் குறித்து பேசினார். சிவகார்த்திகேயன் பேசுகையில், நண்பர் ஒருவர் நடத்திய தீபாவளி கெட் டூ கெதர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் சென்றிருந்தேன். அங்கு கதவை திறந்ததும் அஜீத்குமார் சார் அங்கு இருந்தார். நான் அவரைப் பார்த்ததும் ஷாக் ஆகிவிட்டேன்.

அவர் என்னைப் பார்த்ததும் கை கொடுத்து, வெல்கம் டு த பிக் லீக் எனக் கூறினார். எனக்கு புரியவில்லை சார் எனக்கு கூறினேன். உடனே அவர், உங்களை வளர்ச்சியை பார்த்து சிலர் பயப்படுகிறார்கள் என்றால், நீங்கள் வெல்கம் டு த பிக் லீக் தானே என்று கூறினார். அவர் கூறிய அந்த வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது, என்றார். அஜீத்குமார் குறித்து சிவகார்த்திகேயன் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்