- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் மகள்களுக்குள் இப்படி ஒரு போட்டியா? ஐஸ்வர்யாவை தொடர்ந்து சௌந்தர்யாவும் களத்தில் இறங்கிட்டாரா? - என்ன...

ரஜினிகாந்த் மகள்களுக்குள் இப்படி ஒரு போட்டியா? ஐஸ்வர்யாவை தொடர்ந்து சௌந்தர்யாவும் களத்தில் இறங்கிட்டாரா? – என்ன கொடும சார் இது

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது தனது 170வது படத்தில், தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்கிறார். அடுத்து, மாரிசெல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

ரஜினியை பொருத்தவரை இப்போதைக்கு 3 படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதனால் இன்னும் 2 ஆண்டுகளுக்கு அவர் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கப் போகிறார். இதற்கிடையே தனது மூத்த மகள் ஐஸ்வர்யா டைரக்ட் செய்த லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கேரக்டரில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கேரக்டர் பிடித்துப் போனதால் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்ததாக கூறினார். அது ஒரு காரணமாக இருந்தாலும், மகள் ஐஸ்வர்யாவின் வளர்ச்சிக்காக உதவவும் அந்த படத்தில் அப்பாவாக ரஜினிகாந்த் நடித்ததும் உண்மைதான். ஏனெனில் ஏற்கனவே 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கி தோல்வியடைந்தவர் ஐஸ்வர்யா.

இப்போது ஐஸ்வர்யா, தனுஷ் பிரிந்து வாழ்கின்றனர். இந்த சூழலில் தனக்கு ஒரு மனமாற்றம் தேவை என்பதற்காகவும், தனது வாழ்வில் சினிமா துறையில் சாதிக்க வேண்டும். ரஜினி மகள் என்ற பெருமையை தன் அப்பாவுக்கு தேடித் தர வேண்டும் என்ற ஒரு லட்சியத்துடனும் லால் சலாம் படத்தை டைரக்ட் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

- Advertisement -

இந்நிலையில் அக்கா ஐஸ்வர்யாவை போலவே, அவரது தங்கை சௌந்தர்யாவும், இயக்குநராக தனது திறமையை வெளிப்படுத்த தயாராகி விட்டார். ஏற்கனவே அமேசான் பிரைம் நிறுவனத்துடன் இணைந்து கேங்ஸ் என்ற வெப் சீரிஸை, சௌந்தர்யா தயாரித்து வருகிறார். நோவா ஆபிரஹாம் என்பவர் இந்த தொடரை டைரக்ட் செய்கிறார். இதில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதையடுத்து சௌந்தர்யா ஒரு படத்தை டைரக்ட் செய்ய முடிவு செய்து, அதற்கான பணிகள் துவங்கியுள்ளது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தின் கதாநாயகன் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் என்றும் தெரிய வந்துள்ளது. அக்கா ஐஸ்வர்யா எடுத்த லால் சலாம் படம் ரிசல்ட்டே இன்னும் தெரியவில்லை. அதற்குள் தங்கை செளந்தர்யாவுக்கு என்ன அவசரம் என்ற கேள்வி ரஜினி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்