- Advertisement -
Homeபொழுதுபோக்குலால் சலாம் படத்துக்காக நான் அவர் கூட சண்டை போட்டேன் - செய்தியாளர் சந்திப்பில் உண்மையை...

லால் சலாம் படத்துக்காக நான் அவர் கூட சண்டை போட்டேன் – செய்தியாளர் சந்திப்பில் உண்மையை போட்டுடைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா டைரக்ட் செய்துள்ள படம் லால் சலாம். இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் தயாரித்துள்ளது. ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த வாரத்தில் நடந்த நிலையில், நேற்று டிரெய்லர் வெளியானது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏற்கனவே 3 மற்றும் வை ராஜா வை என்ற 2 படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் லால் சலாம் படம் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் ரஜினிகாந்த் நடித்திருப்பது படத்துக்கு பெரிய பலமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் ஐஸ்வர்யா. 17 ஆண்டுகள் அவர்களது திருமண வாழ்க்கை நீடித்த நிலையில், திடீரென பிரிந்து விட்டதாக அறிவித்தனர். இரண்டு வளர்ந்த பிள்ளைகள் உள்ள நிலையில், அவர்களது இந்த பிரிவு, இருவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பெரிய அதிர்ச்சியை தந்தது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் என்ற அடையாளத்தை நிரூபிக்கவும், தனது கலையார்வத்தை, திறமையை வௌிப்படுத்தும் விதமாகவும் டைரக்சன் துறையில் இறங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா. தனது கணவர் தனுஷ் சிறந்த நடிகர் என்பதை போல, தன்னை ஒரு சிறந்த இயக்குநராக தமிழ் சினிமாவில் நிரூபிக்க லால் சலாம் படத்தை டைரக்ட் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா.

- Advertisement -

லால் சலாம் படத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக, பிரமோ நிகழ்ச்சிகளில் படத்தில் நடித்த விக்ராந்த், விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துக்கொண்டனர். லால் சலாம் ஷூட்டிங்கில் நடந்த விஷயங்களை அவர்கள் வெளிப்படையாக கூறினர்

அப்போது பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் படத்தை மொத்தம் 91 நாட்கள் ஷூட் செய்தோம். இந்த நாட்கள் எனக்கு நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. சினிமாவுல சண்டை நடக்காத ஷூட்டிங் செட் கிடையாது. ஆனால், லால் சலாம் செட்ல சண்டையே வரவில்லை. ஆனால் இன்னிக்கு காலையில் ஏஆர் ரகுமான் சார் கூட சண்டை போட்டேன். படம் ரிலீஸ் சமயத்துல, வெளிநாட்டுல இருக்கீங்களேன்னு. ஆனால் அவர் அடிக்கடி கால் பண்ணி பேசிக்கிட்டுதான் இருக்கார், என்று கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

- Advertisement -

சற்று முன்