உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள்தான் ஸ்ருதிஹாசன். தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்பார்களே, அந்த பழமொழியை நிச்சயம் நிரூபித்து காட்டியவர்தான் நடிகை ஸ்ருதிஹாசன். தனது சொந்த வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தனது தந்தையே குருவாக ஏற்று அதன்படியே தனது வாழ்க்கை பாதையை வகுத்துக்கொண்டவர் ஸ்ருதி.
நடிகர் கமல்ஹாசன், வாணி கணபதி, சரிகா ஆகிய இரண்டு பேரை திருமணம் செய்துவிட்டு, பிறகு கவுதமியுடன் தாலி கட்டாமல் 17 ஆண்டுகள் குடும்பம் நடத்தினார். கணவன், மனைவி போலவே ஒன்றாக வாழ்ந்தனர். அதையே பின்பற்றி ஸ்ருதிஹாசனும், திருமண வயது கடந்து பல ஆண்டுகள் ஆகியும், அவரது திருமணம் பற்றி பேசுவதே இல்லை. இதுவரை 5 ஆண் நண்பர்களுடன் லிவிங் டு ரிலேசன்ஷிப்பில் வாழ்ந்து விட்டதாக அவரே நேர்காணலில் கூறியிருக்கிறார்.
நடிகை ஸ்ருதிஹாசன், தமிழில் சில படங்களில் நடித்தார். சூர்யாவுடன் ஏழாம் அறிவு படத்தில்தான் அவர் நாயகியாக அறிமுகமானார். ஏஆர் முருகதாஸ் இயக்கிய இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து பூஜை, 3, புலி, வேதாளம் உள்ளி்ட்ட சில படங்களில் நடித்த அவர், தமிழில் பெரிய வரவேற்பு இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
ஏனெனில் தெலுங்கு சினிமாவில் இன்னும் நடிகைகளை, ஹீரோவுடன் அரைகுறை ஆடையுடன் குத்தாட்டம் போடும் நிலையிலேயே தான் வைத்திருக்கின்றனர். அங்கு கவர்ச்சியில் தாராளம் காட்டும் கதாநாயகிகளுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. அதனால் ஸ்ருதிஹாசன் தெலுங்கில் தன் ஆடைகளை பறக்கவிட்டு, தன் கொடியையும் பறக்கவிட்டு வருகிறது.
இதற்கிடையே சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினி 171 படத்துக்காக ஸ்கிரிப் எழுதும் பணியில் இருந்த லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசனுடன் இருந்த புகைப்படம் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருவரும் ஒரு புதிய படத்தில் ஜோடியாக நடிப்பதாகவும் ஒரு தகவல் பரவியது.
ஆனால் உண்மையில் அது ஸ்ருதிஹாசன் ஒரு இசை ஆல்பம் தயாரிக்கிறார். அதில் ஸ்ருதிஹாசனே எழுதி, பாடி, அவரே இசையமைத்து அந்த ஆல்பத்தை வெளியிடுகிறார். அதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கிறார். பெரிய அளவில் செலவு செய்து படப்பிடிப்பு நடத்தி, இந்த ஆல்பத்தை ஸ்ருதிஹாசன் விரைவில் வெளியிட இருக்கிறார். தந்தை கமல்ஹாசன் மாதிரியே இசை ஆல்பத்தில் புதுமைகளை புகுத்தும் விதமாக, லோகேஷ் கனகராஜ் போன்ற செலிபரட்டிகளை அறிமுகப்படுத்துகிறார் ஸ்ருதிஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.





