நடிகர் ரஜினிகாந்த் – லதா தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா, இளைய மகள் சௌந்தர்யா. ரஜினிக்கு மகள்கள் மட்டுமே, ஆண் வாரிசு இல்லை. என்றாலும் ரஜினி வாரிசுகளாக கலைத்துறையில் ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவருமே ஆர்வமாக இருக்கின்றனர். கோச்சடையான் படத்தை இளைய மகள் சௌந்தர்யா டைரக்ஷன் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற படத்தை டைரக்ட் செய்தார். அடுத்து கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை என்ற படத்தையும் டைரக்ட் செய்தார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. எதிர்பார்த்த வெற்றியை படம் பெறவில்லை.
இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருக்கிறார். இந்த படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினி நடிப்பு தரமான சம்பவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்துக்கு பிறகு டைரக்ஷன் துறையில் தனக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். ரஜினி, அஜீத், விஜய் படங்களை போல, ரசிகர்கள் நான் இயக்கும் படங்களின் அப்டேட் கேட்கும் நிலை உருவாகும். அந்தளவுக்கு லால் சலாம் படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்றும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறார்.
இதற்கிடையே, ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், ஒரு படத்தை டைரக்ட் செய்கிறார். அந்த படத்தை தயாரிப்பாளர் எஸ் தாணு தயாரிக்கிறார். இதில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இந்த படத்தில், ரஜினியை கேமியோ ரோல் செய்து தருமாறு, இளையமகள் சௌந்தர்யாவும் கேட்டு இருக்கிறார்.
ஏற்கனவே மூத்த மகள் ஐஸ்வர்யா கேட்டுக்கொண்டதால், லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்போது இளையமகள் சௌந்தர்யாவும் தன்னை அதே போல் நடித்து தருமாறு கேட்கிறார். சொத்தில் பாகப்பிரிவினை கேட்பது போல, நடிப்பிலும் பங்கு கேட்கும் மகள்களால் ஆச்சரியப்பட்டுப் போன ரஜினி, சௌந்தர்யா இயக்கும் படத்திலும் கேமியோ ரோல் செய்ய சம்மதித்து உள்ளார். மேலும், 10 நாட்கள் கால்ஷீட் தந்து, அதற்கான தேதியும் ஒதுக்கி தந்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.





