நடிகர் விஜய் இப்போது டாப் லெவலில் இருக்கிறார். ஆனாலும் அரசியல் ஆர்வம் காரணமாக தனது நம்பர் ஒன் இடத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு செல்லும் முடிவை எடுத்துவிட்டார். விஜய் நடித்த சுமாரான படங்கள் கூட சூப்பர் வசூலை பெறும் அளவுக்கு, ரசிகர்கள் பெருகி விட்டனர்.
மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ என தொடர்ந்து படங்கள் விமர்ச ரீதியாக பெரிய அளவில் பேசப்படாத நிலையிலும், வசூல் ரீதியாக அந்த படங்கள் பல நூறு கோடிகளை குவித்து விட்டன. இதற்கு காரணம், விஜயை பொருத்த வரை அவர் நடித்தால் படங்கள் ஓடிவிடுகின்றன. அந்த லெவலில் அவர் ரசிகர்களிடம் அபிமானம் பெற்றிருக்கிறார்.
இப்போது நடித்தும் வரும் வெங்கட்பிரபுவின் கோட், அதன்பிறகு ஒரு படம் என 69 படங்கள் என இலக்குடன் சினிமா பயணத்தை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ள விஜய், அடுத்து அரசியல் களத்தில் பயணிக்கிறார். வரும் 2026ல் சட்டசபை தேர்தலில் முதல்வர் நாற்காலிதான் அவரது இலக்காக இருக்கிறது.
விஜய் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுக நடிகராக இருந்து பின்பு படிப்படியாக வளர்ச்சி பெற்றார். அதே போல் அந்த காலகட்டத்தில் அவரது படங்களை இயக்கிய, தயாரித்த, அவருடன் நடித்த அனைவருக்குமே அது ஏறுமுகமாக அமைந்தது. அதனால் அவரது படங்களை இயக்க வாய்ப்பு கிடைப்பதே அதிர்ஷ்டமான ஒரு விஷயமாக பார்க்கப்பட்டது.
அந்த வகையில் முரளி, சுவலட்சுமி நடித்த தினந்தோறும் என்ற படத்தை இயக்கிய இயக்குநர் நாகராஜன். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து ஒரு படத்தை இயக்க கதையை தயார் செய்திருக்கிறார். அப்போது, விஜய் நடிக்கும் படங்களின் கதையை, விஜய் அப்பா எஸ்ஏ சந்திரசேகர்தான் முடிவு செய்தார். அவரிடம் சென்று விஜய் படத்துக்கான கதையை, நாகராஜன் கூறியிருக்கிறார். கதை ரொம்ப பிடித்து விட்டதால், உடனே ஓகே சொன்ன எஸ்ஏ சந்திரசேகர், விஜயை சந்தித்து கதை சொல்ல அனுமதித்து இருக்கிறார்.
அடுத்த நாள் இயக்குநர் நாகராஜன், விஜயிடம் கதைசொல்ல போன போது, மதுப்பழக்கம் உள்ள அவர் புல் போதையில் தள்ளாடியபடி சென்று இருக்கிறார். என்ன இதெல்லாம் என கேட்ட விஜயிடம், ‘இதில் என்ன தப்பு, வேலையில் கரெக்டா இருப்பேன்’ என பதில் சொல்லி இருக்கிறார். அவரது பதிலை ஏற்காத விஜய், நோ சொல்லி திருப்பி அனுப்பி விட்டார். இப்போதும் அதை பலரிடம் சொல்லி புலம்பிக்கொண்டு இருக்கிறார் இயக்குநர் நாகராஜன்.





