தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் பேரரசு. முன்னனி நடிகர்கள் நடித்த சில வெற்றி படங்களை தந்திருக்கிறார். குறிப்பாக நடிகர் விஜய் நடித்த சிவகாசி மற்றும் திருப்பாச்சி ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு. திருத்தணி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை என கோவில் வழிபாட்டு தலங்கள் பெயர்களையே தனது படங்களுக்கு டைட்டிலாக வைப்பவர் பேரரசு.
நடன இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா நடித்த பேட்டராப் படம் வருகிற 27ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார். ப்ளூ ஹில் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பிரபுதேவா, நடிகை வேதிகா, மற்றும் சிறப்பு விருந்தினராக நடிகை சன்னி லியோன், இயக்குனர் பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு, சில ஆண்டுகளுக்கு முன் இந்தி தெரியாது போடா என்று சொன்னார்கள். அதை கேட்கும் போது சந்தோஷமாக இருந்தது. நிறைய பேர் இந்தி தெரியாத போடா என்று வாசகங்கள் எழுதிய டீ சர்ட் அணிந்தார்கள். அதை பார்க்கும் போதும் சந்தோஷமாக இருந்தது.
ஆனால் இப்போது இந்தி தெரியாதது மிகப்பெரிய கவலையாக எனக்கு மாறிவிட்டது. பக்கத்தில் நடிகை சன்னி லியோன் உட்கார்ந்திருக்கிறார். இரண்டு வார்த்தை கூட அவருடன் இந்தியில் பேச முடியவில்லை. இதற்காகவாவது நான் இந்தி கத்துக்க வேண்டும் என்று கிண்டலாக பேசினார். அது சமூக வலைதளங்களில் வைரலானது.
தமிழ் சினிமா இயக்குனர்கள் தமிழில் படங்களில் தமிழ் ஆர்வலர்களாக தங்களை காட்டிக் கொள்கின்றனர். இந்தி மறுப்பாளர்களாகவும் தங்களை பற்றி பெருமை பேசுகின்றனர். ஆனால் இப்படி இந்தி நடிகை சன்னி லியோனியுடன் பேச முடியவில்லை என்பதற்காக இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குனர் பேரரசு கூறியிருப்பதை இவ்வளவுதான் உங்களது தமிழ் பற்று என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





