- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல் நாள் ஷூட்டிங்கிலேயே இப்படி ஒரு பஞ்சாயத்தா? மூடு அவுட் ஆன ஏஆர் முருகதாஸ், அப்செட்...

முதல் நாள் ஷூட்டிங்கிலேயே இப்படி ஒரு பஞ்சாயத்தா? மூடு அவுட் ஆன ஏஆர் முருகதாஸ், அப்செட் ஆன சிவகார்த்திகேயன்

- Advertisement -

கஜினி, ரமணா, துப்பாக்கி, சர்க்கார் போன்ற வெற்றிப்படங்களை எடுத்த இயக்குநர் ஏஆர் முருகதாஸ், ரஜினிகாந்தை வைத்து எடுத்த படம் தர்பார். நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம், மிகப்பெரிய பிளாப் படமாக போய் விட்டது. அதற்கு பிறகு படங்களை இயக்கும் வாய்ப்பில்லாமல் இருந்தார் ஏஆர் முருகதாஸ்.

இந்நிலையில், கடந்த ஆண்டிலேயே சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து படம் எடுக்க, ஏஆர் முருகதாஸ் கமிட் ஆனார். மாவீரன், அயலான் படங்களை முடித்துவிட்டு இந்த படங்களில் நடிப்பதாக சிவகார்த்திகேயன், ஏஆர் முருகதாஸிடம் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி அந்த படங்கள் ரிலீஸ் ஆன நிலையில், இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

- Advertisement -

முதல் நாள் படப்பிடிப்பு நேற்று சென்னை, மணப்பாக்கம் பகுதியில் ஒரு குவார்ட்டர்ஸ்சில் நடந்துள்ளது. அப்போது அங்கு யூனிட்டில் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த படத்தின் தயாரிப்பாளர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால், அங்கு இருந்து தனது படங்களில் பணிபுரியும் ஊழியர்களை இங்கு வரவழைத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெப்ஸி அமைப்பினர், உடனடியாக அங்கு சென்று படப்பிடிப்பை நிறுத்தினர். இங்குள்ள பெரிய நடிகர்கள், ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டிக்கு சென்றுவிட்டால், மாதக்கணக்கில் அங்கு ஷூட்டிங் நடக்கிறது. அதே போல் வெளிநாடுகளில் ஷூட்டிங் வைத்து விடுகின்றனர். அதனால் இங்குள்ள பெப்ஸி தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து கஷ்டப்படுகின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே, இங்குள்ள பெரிய நடிகர்களிடம் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் படப்பிடிப்பை நடத்துங்கள். அப்போதுதான் இங்குள்ள சினிமா தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதனால் தொழிலாளர்களுக்கும் நியாயமாக கிடைக்க வேண்டிய பணிவாய்ப்பும் அமையும் என்று கூறியிருக்கின்றனர்.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஹீரோக்கள், ஹீரோயின்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவார்கள் எங்கு ஷூட்டிங் என்றாலும் விமானத்தில் பறக்கின்றனர். அவர்களுக்கான சம்பளத்தை பெற்று விடுகின்றனர். ஆனால் சினிமா தொழிலை நம்பி சென்னையில் வாழும் தொழிலாளர்களுக்கு ஒரே வாய்ப்பு சென்னையில் படப்பிடிப்புகள் நடந்தால் மட்டுமே அவர்கள் 3 வேளை உணவருந்த முடியும். இதை உணர்ந்து படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என, பெப்ஸி அமைப்பினர், ஏஆர் முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்