- Advertisement -
Homeபொழுதுபோக்குஇட்லிகடை படம் ரிலீஸ் தேதியை முடிவு செய்வதில் நீடிக்கும் சிக்கல் - அஜீத்குமாரை போல அந்த...

இட்லிகடை படம் ரிலீஸ் தேதியை முடிவு செய்வதில் நீடிக்கும் சிக்கல் – அஜீத்குமாரை போல அந்த நடிகர்களும் இடையூறு செய்கிறார்களா?

- Advertisement -

ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய 3 படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கிய 4வது படம் இட்லி கடை. இந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நித்யா மேனன் சத்யராஜ் ராஜ்கிரண் அருண்விஜய் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

வரும் ஏப்ரல் 10ம் தேதி இட்லி கடை படம் ரிலீஸ் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் படத்தில் சில முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் எடுக்க வேண்டி இருப்பதால் குறிப்பிட்ட அந்த தேதியில் இட்லி கடை படம் வெளிவராது என அதிகாரபூர்வமாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த தேதியில் அஜீத்குமார் நடித்த குட்பேட் அக்லி படம் ரிலீஸ் என்பதும் முக்கிய காரணம்.

- Advertisement -

வெளிநாட்டில் தனுஷ் நித்யாமேனன் நடிக்க வேண்டிய காட்சிகளை படப்பிடிப்பு நடத்தி எடுத்து முடித்த பிறகு படம் வெளியீடு தேதி குறித்து அறிவிக்கப்படும். அதுவரை படம் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் இப்போது நடிகர் தனுஷ் டெல்லியில் நடந்து வரும் இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதனால் இப்போதைக்கு அவர் இட்லி கடை ஷூட்டிங்கில் பங்கேற்க வாய்ப்பில்லை.

அதுமட்டுமின்றி திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நாயகி நித்யா மேனனை இந்த படத்தில் இயக்குனர் தனுஷ் நடிக்க வைத்திருக்கிறார். இந்த படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே கால்ஷீட் விஷயத்தில் பிரச்னை ஏற்பட்டு பல நாட்கள் நித்யாமேனன் படப்பிடிப்பு தளத்தில் சும்மாவே அமர வைக்கப்பட்டு இருந்ததால், தனுஷ் மீது பயங்கர கடுப்பில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

தாய்லாந்து நாட்டில் 10 முதல் 15 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்படும் பட்சத்தில் வருகிற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இட்லி கடை படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டாலும் அதில் பல சிக்கல்கள் இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது. ஏனெனில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் ஜூலை மாதம் வர வாய்ப்புள்ளது. ஏனெனில் ஆகஸ்ட் 14ம் தேதி ரஜினிகாந்த் நடித்த கூலி படம் வருவதால் மதராஸி முன்னதாகவே திரைக்கு வர உள்ளது.

மேலும் வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் கமல் சிம்பு நடித்த தக்லைப் படம் வெளியாக உள்ளது. அடுத்த 2 வாரங்களில் ஜூன் 20ம் தேதி தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த குபேரா படமும் ரிலீஸாக உள்ளது. ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படமும் திரைக்கு வருகிறது. இப்படி அடுத்தடுத்த நட்சத்திர நடிகர்கள் படங்கள் ரிலீஸாக இருப்பதால், இட்லி கடை படத்தை ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வெளியிட முடியாத நெருக்கடியான நிலை இயக்குனர் தனுஷூக்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்