இயக்குநர் அமீர், தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு முக்கிய படைப்பாளியாக இருந்து வருகிறார். சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யாவுக்கு நடிகன் என்ற அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படம்தான். அந்த படத்தில்தான் சூர்யா, நடிக்க கற்றுக்கொண்டிருந்தார்.
அடுத்து சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தி, பருத்தி வீரன் படம் மூலம் மிகப்பெரிய ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தை இயக்கியதும் இயக்குநர் அமீர்தான். ஆனால் இந்த படத்தை டைரக்ட் செய்தது மட்டுமின்றி, தயாரிக்கவும் செய்தார். ஆனால் அந்த தயாரிப்பு செலவு பணத்தை தராமல் ஏமாற்றி தங்களது நன்றியை வெளிப்படுத்தியதுதான் நடிகர் சிவக்குமாரின் குடும்பம்.
இப்படி சிவக்குமார் குடும்பம் தன்னை ஏமாற்றிய நிலையில், 17 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பருத்தி வீரன் தயாரிப்பு குறித்த வழக்கு நடந்து வருகிறது. அதுபற்றி எந்த இடத்தில் மூச்சு விடாமல் நீதியின் தீர்ப்புக்காக காத்திருந்த அமீர், ஒரு நேர்காணலின் போது கார்த்தி 25 நிகழ்ச்சிக்கு, அவரது முதல் பட டைரக்டரான நீங்கள் ஏன் போகவில்லை என்று வற்புறுத்தி கேட்ட போதுதான் உண்மையை சொன்னார்.
அப்படி இருந்தாலும், வழக்கு குறித்த தெரிவித்த அவர் சிவக்குமார் பற்றியோ, சூர்யா, கார்த்தி பற்றியோ எந்தவிதமான தவறான விமர்சனமும் வைக்கவில்லை. ஆனால் சிவக்குமார் குடும்பத்தின் தூண்டுதலின் பேரில் நேர்காணலில் கலந்துக்கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீரை மிக மிக தரக்குறைவாக பேசினார். அமீரை மட்டம் தட்டினார். இதற்கு தமிழ் சினிமா இயக்குநர்கள் பலரும், எதிர்ப்பு தெரிவித்ததால் அடங்கிப் போனார்.
இந்த பிரச்னைக்கு இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில், இயக்குநர் அமீர் பேசிய ஒரு நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது அந்த நேர்காணலில் இயக்குநர் அமீர், தமிழ் சினிமாவில் பெண்களுக்கு எப்படி அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கிறதோ, அதுபோல் ஆண்களுக்கும் ஒரு முக்கியமான பிரச்னை இருக்கிறது என்று கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் என்னிடம், நீங்கள் கொஞ்சம் அட்ஜஸ்மென்ட் செய்தால், பல கோடிகள் சம்பாதிக்கலாம் என்றார். பெண்களுக்குதானே இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை இருக்கு, எனக்குமா என்று கேட்ட போது, அதற்கு அவர் ஹீரோ சொல்வதற்கு எல்லாம் சரி சரி என தலையாட்ட சொன்னார். இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். என் அறிவையும், நம்பிக்கைையும் யாரிடமும் அடமானம் வைக்க மாட்டேன் என்று அமீர் கூறிய அந்த பழைய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.





