புரட்சித்தலைவர் எம்ஜிஆர், திரைப்படங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்தார். சினிமாவில் கூட புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் எம்ஜிஆர் நடிக்க மாட்டார். ஏனெனில் தன்னை பார்த்து தன் ரசிகர்கள் தவறான வழியில் சென்று உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான்.
சினிமாவில் அவரது செயல்பாடுகள், நிஜத்தில் அவரது வாழ்க்கையும் ஒன்றாகவே இருந்தது. அவரது உண்மை தன்மை அவருடன் இருந்தவர்களுக்கும், பணிபுரிந்தவர்களுக்கும் பிடித்துப் போனது. ரசிகர்களும் அவரைக் கொண்டாடினர்கள். சினிமா ஹீரோவாக மட்டுமின்றி நிஜத்தில் மக்கள் மத்தியில் ஹீரோவாக மாறினார் எம்ஜிஆர்.
அதன்பின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை துவங்கினார். 3 முறை சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்று முதல்வர் இருக்கையில் அமர்ந்தவர். 3வது முறை, அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரை ஜெயிக்க வைத்தவர் தமிழக மக்கள். எம்ஜிஆர் மறைவுக்கு பின் அவரது அரசியல் வாரிசாக அதிமுகவை வழிநடத்தி, முதல்வராக ஆட்சி செய்தவர் ஜெயலலிதா.
செல்வி ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லாத நிலையில், அவரது அரசியல் வாரிசு என்பதில் கடைசி வரை முடிவு தெரியாமல் போய்விட்டது. ஆனால் 2ம் கட்ட தலைவர்களாக இருந்த ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், தம்பிதுரை போன்றவர்களை அவரால் அரசியல் வாரிசாக உருவாக்க முடியவில்லை.
ஆனால் ஒரு கட்டத்தில் நடிகர் அஜீத்குமாரை, ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அஜீத்குமார் மீது தனிப்பட்ட அன்பும், அக்கறையும் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அவரது குட்புக்கில் அஜீத்குமார் பெயர் இருந்துள்ளது. அவர் நோய்வாய்ப்பட்டு இருந்த சமயத்தில், அஜீத்குமாரை சந்திக்க வருமாறு அவர் கூறியதாகவும், சசிகலா தரப்பு அதை மூடி மறைத்துவிட்டு, அஜீத்குமார் வெளிநாட்டில் ஷூட்டிங்கில் இருக்கிறார் என ஜெயலலிதாவிடம் கூறியதாகவும் அப்போதே தகவல்கள் பரவின.
இந்நிலையில், சமீபத்தில் இறந்த வெற்றி துரைசாமி திருமணத்துக்கு வந்த ஜெயலலிதா, வழியில் அஜீத்குமாரை பார்த்துவிட்டு கான்வேயில் சென்ற அவர், காரை நிறுத்தி விட்டு, இறங்கி வந்து அஜீத்குமாரிடம் நலம் விசாரித்திருக்கிறார். யாருக்கும் அவ்வளவு முக்கியத்துவம் தராதவர் ஜெயலலிதா. அந்தளவுக்கு அஜீத் மீது தனிப்பட்ட பிரியம் வைத்திருந்தார் ஜெயலலிதா. அஜீத் மட்டும் துணிச்சலாக முன்வந்து இருந்தால், அஜீத்தை தனது அரசியல் வாரிசாக ஜெயலலிதா அறிவித்திருக்கவும் வாய்ப்புள்ளதாக, பேசப்படுகிறது.





