நடிகை திரிஷா லேசா லேசா என்ற படத்தின் ஷ்யாம் ஜோடியாக நடித்து அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே ஜோடி படத்தில் சிம்ரனின் தோழிகளில் ஒருவராக நடித்திருப்பார். ஆரம்ப காலத்தில் திரிஷாவுக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில படங்களில் நடித்திருந்தும் ரசிகர்களிடம் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு, முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும், மன்மதன் அம்பு படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார். இப்போதும் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக்லைப் படத்தில் கமிட் செய்யப்பட்டுள்ளார்.
திரிஷா, பல முன்னணி நாயகர்களுடன் நடித்தவர் என்றாலும் விஜயுடன் 5 படங்களில் நடித்துள்ளார். திருப்பாச்சி, ஆதி, குருவி, கில்லி மற்றும் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான லியோ என 5 படங்களில் நடித்துள்ளார். இதில் குருவி, ஆதி படங்கள் மட்டுமே பிளாப் ஆன நிலையில், கில்லி, திருப்பாச்சி ஆகிய 2 படங்களும் பெரிய ஹிட் படங்களாக இருந்தன. லியோ, விமர்சன ரீதியாக தோல்வி கண்டாலும், வசூல் அளவில் பெரிய வெற்றிப் படம்தான்.
திரிஷாவுக்கு சினிமா பயணத்தில் சிறிது சரிவு ஏற்பட்ட நேரத்தில் கொடி படம் ஓரளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் இதில் வில்லியாக நடித்திருந்தார். அடுத்து விஜய் சேதுபதியுடன் நடித்த 96 படம் மிகப்பெரிய கம்பேக் ஆக அமைந்தது. அதன்பின் பொன்னியின் செல்வன், குந்தவை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
குந்தவையாக திரிஷா ரசித்த ரசிகர்கள், 40 வயது கடந்தும் திரிஷா இவ்வளவு அழகா இருக்கிறாரே என, உயிர் உங்களுடையது தேவி என டயலாக் பேசி, வலைதளங்களில் ஹார்ட்டின்களை பறக்க விட்டனர். அதன்பின் லியோ, விடாமுயற்சி, தக்லைப், தெலுங்கில் சிரஞ்சீவி படம், மலையாளத்தில் முக்கிய இயக்குநர்களின் 2 படங்கள் என செம பிஸியாக நேரமில்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறார் திரிஷா.
ஆனால் நடிக்க வந்த புதிதில் 2000ம் ஆண்டுகளில் தொடர்ந்து சினிமாவிலும், சொந்த வாழ்விலும் பிரச்னைகளை, சரிவை சந்தித்த திரிஷா, இனி சினிமாவை விட்டு விலகி விடலாம் என்று முடிவெடுத்துள்ளார். அப்போது 2003ல் ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த சாமி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் பிளாப் ஆனால், நடிப்புக்கு கும்பிடு போட்டு விடலாம் என்ற முடிவில் இருந்திருக்கிறார். ஆனால் சாமியாக நடித்த சியான் விக்ரம், மாபெரும் வெற்றியை கொடுத்ததால், அந்த முடிவை மாற்றிக்கொண்டு, தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தியிருக்கிறார் திரிஷா. இல்லை என்றால் 20 ஆண்டுகளுக்கு முன்பே, நடிப்புக்கு குட்பை சொல்லியிருப்பாராம் திரிஷா.





