- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியில் உருவாகும் அருந்ததி, ஆனா கதாநாயகி அனுஷ்கா கிடையாது, யார் தெரியுமா? - தரமான சம்பவத்துக்கு...

இந்தியில் உருவாகும் அருந்ததி, ஆனா கதாநாயகி அனுஷ்கா கிடையாது, யார் தெரியுமா? – தரமான சம்பவத்துக்கு தயாரான மாஸ் டைரக்டர்!

- Advertisement -

தமிழ் தெலுங்கில் முன்னணி நாயகியாக பல படங்களில் நடித்தவர் அனுஷ்கா ஷெட்டி. கடந்த 2009ம் ஆண்டில் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் தெலுங்கில் வெளியான படம் அருந்ததி. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. இந்த படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்றது. இந்த படத்துக்கு பின்தான் தமிழில் அனுஷ்கா ஒரு ரவுண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ரஜினிகாந்த் விஜய் அஜீத்குமார் சூர்யா விக்ரம் ஆர்யா என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் பருமனான கேரக்டரில் நடித்த அனுஷ்கா அதற்காக உடல் எடையை அதிகரித்தார். ஆனால் அதன்பிறகு அவரது உடல் எடை குறையாமல் போனதால் பட வாய்ப்புகளை இழந்தார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த வாரத்தில் அவர் நடித்த காதி படம் வெளியானது. விக்ரம் பிரபு ஜோடியாக நடித்த இந்த படமும் அனுஷ்காவுக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனால் அனுஷ்காவுக்கு மிகப்பெரிய அடையாளமாக இருந்த படங்கள் அருந்ததி மற்றும் பாகுபலி என்ற 2 படங்கள் என்றால் அது மிகையல்ல.

இந்த சூழலில் நடிகர் ரவி மோகனின் அண்ணன் மோகன்ராஜா, பல வெற்றிப் படங்களை தந்தவர். அவர் தனது தம்பி ரவி மோகன் நடித்த தனி ஒருவன் படத்தை 2ம் பாகமாக எடுக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார். ஆனால் அவரது தம்பி இதுவரை அண்ணனுக்கு கால்ஷீட் தரவில்லை. இதற்கிடையே ரவிமோகன் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் மாறிவிட்டார்.

- Advertisement -

அதனால் இனி தம்பியை நம்பிக்கொண்டு காத்திருப்பதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. அவரது கால்ஷீட் இப்போதைக்கு கிடைக்காது என்பதை புரிந்துக்கொண்ட இயக்குனர் மோகன்ராஜா, தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார். அதுவும் இந்தியில் டைரக்ட் செய்யப் போகிறார். தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு செல்லும் அடுத்த தமிழ் பட இயக்குனர் மோகன் ராஜா தான்.

கடந்த 2009ம் ஆண்டில் வந்த மாஸ் வெற்றியை பெற்ற அருந்ததி படத்தை தான் இயக்குனர் மோகன் ராஜா ரீ மேக் செய்து இயக்க உள்ளார். ஆனால் படத்தின் நாயகி அனுஷ்கா அல்ல. நடிகை ஸ்ரீ லீலாதான். தெலுங்கில் வெளியான அருந்ததி படத்தில் சில மாறுதல்களை செய்து இந்தியில் உருவாக்க மோகன் ராஜா முடிவு செய்திருக்கிறார். இதில் அனுஷ்கா கேரக்டரில் நடிக்கப் போவது நடிகை ஸ்ரீலீலா என்பதும் உறுதியாகி விட்டது.

- Advertisement -

சற்று முன்