- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடிக்கும் கோட் ஷூட்டிங்கில் நடந்த அந்த தரமான சம்பவம் - வெங்கட்பிரபுவே வெளிப்படையாக எல்லாத்தையும்...

விஜய் நடிக்கும் கோட் ஷூட்டிங்கில் நடந்த அந்த தரமான சம்பவம் – வெங்கட்பிரபுவே வெளிப்படையாக எல்லாத்தையும் சொல்லிட்டாரே?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிநேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா, ரம்யாகிருஷ்ணன், கனிகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், விடிவி கணேஷ், சுதீப், கஞ்சா கருப்பு, பிரேம்ஜி, வைபவ், அஜ்மல் என ஒரு நட்சத்திர கூட்டமே நடிக்கிறது.

முதலில் ஏப்ரல் மாதத்தில், சிவகாசி போன்ற படங்களில் நடிகராக தான் வெங்கட்பிரபு அறிமுகமானார். பிறகு சென்னை 28 படம் மூலம், வெங்கட்பிரபு இயக்குநரானார். அந்தப் படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து சரோஜா, சென்னை 28 படம் 2ம் பாகம், மங்காத்தா, கோவா, மாநாடு போன்ற வெற்றிப் படங்களை தந்து இப்போது நடிகர் விஜயை இயக்கும் அளவுக்கு பெரிய இயக்குநராக உருவாகி விட்டார்.

இதற்கிடையே வெங்கட்பிரபு எப்போதும் தன் நண்பர் கூட்டத்தை வைத்துதான் படம் எடுக்கிறார். அவரது படங்களில் குறிப்பாக வைபவ், கட்டாயம் இருப்பார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சரோஜா படத்தில் அறிமுகமான நடிகர் வைபவ், இப்போது கோட் படத்திலும் நடிக்கிறார். இது வைபவ்க்கு 25 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற இயக்குநர்களின் படங்களில் வைபவ் நடிக்கிறார். அத்துடன் வைபவ் நடித்த ரணம் என்ற படம் இப்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த சூழலில், இயக்குநர் வெங்கட்பிரபு, வைபவ் ஆகியோர் இணைந்து கலாட்டா செய்து வெளியிட்ட வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அதில் ஒருவரை ஒருவர் ஜாலியாக கலாய்த்து பேசி சிரிக்கின்றனர்.

அந்த வீடியோவில் பேசிய வெங்கட்பிரபு, வாழ்க்கையில் சில விஷயங்கள் எப்படி நடந்தது என யோசிக்க வைக்கும். அதுபோன்றதுதான் வைபவ் 25 படங்களில் நடித்திருப்பதும். நான் அறிமுகப்படுத்திய ஹீரோ 25 படங்களில் நடித்திருப்பது என்னை அதிக வயதானவனாக உணர வைக்கிறது, என்று கிண்டலாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நான்கைந்து படங்களில் நடிப்பதே பெரிய விஷயம். இதில் 25 படங்களில் வைபவ் நடித்திருப்பது பெருமையான விஷயம் என்றும் வெங்கட்பிரபு கூறிய போது, தன்னை அறிமுகப்படுத்திய வெங்கட்பிரபுவை பெருமைப்படுத்தும் விதமாக, தினமும் ஷூட்டிங்கில் தவறால் கலந்துக்கொண்டு சாதித்தேன் என்றும் வைபவ் கூறுகிறார். ரணம் படத்துக்கு ரிவ்யூ ரிசல்ட் நன்றாக இருப்பதாகவும், அதில் தானும் கேமியோ ரோலில் நடித்திருப்பதாகவும் அந்த வீடியோவில் வெங்கட்பிரபு கூறியிருக்கிறார்.

சற்று முன்