- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குநர் பாலாவிடம் அந்த விஷயத்தை கேட்டு அடம்பிடித்த நடிகர் சூர்யா, பயங்கர கடுப்பான பாலா -...

இயக்குநர் பாலாவிடம் அந்த விஷயத்தை கேட்டு அடம்பிடித்த நடிகர் சூர்யா, பயங்கர கடுப்பான பாலா – பிரபலம் சொன்ன தகவல்!

- Advertisement -

இயக்குநர் பாலா தமிழ் சினிமாவில் மிக முக்கிய படைப்பாளியாக கவனிக்கப்படுபவர். பல நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர். சாதாரணமான நாயகர்களை, வித்யாசமான கோணங்களில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். பல கலைஞர்களின் அசாத்திய திறமையை வெளியே கொண்டு வந்து, திரையில் காட்டியவர்.

இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து அதன்பின் சேது படம் மூலம் பாலா, இயக்குநரானார். தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற பல நல்ல படங்களை தந்தவர். அவை வெற்றிப் படங்களாகவும் அமைந்தன.

அடுத்து அருண் விஜய் நடிப்பில், டைரக்டர் பாலா இயக்கிய வணங்கான் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் முதலில் நடித்தவர் நடிகர் சூர்யா தான். ஆனால் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார். அதன்பிறகு சூர்யா கேரக்டரில் அருண் விஜய் நடித்திருக்கிறார்.

இயக்குநர் பாலாவை பொருத்தவரை, தன் படத்தில் நடிக்கும் கதாநாயகன்களை, பெரிய அளவில் மதித்து மரியாதை தரமாட்டார். அவரை பொருத்தவரை தன் படத்தில் பணிபுரியும் ஒருவர் என்ற சாதாரணமான மனநிலையில்தான் அவரை நடித்துவார். ஆர்யா, விஷால், அதர்வா, விக்ரம், சசிக்குமார் என யாருக்குமே அவர் முக்கியத்துவம் தராமல் ஒரு நடிகனாக மட்டுமே நடத்தி இருக்கிறார்.

இதே போல் ஒரு சம்பவம், சூர்யா ஆரம்பத்தில் நடித்த நந்தா படப்பிடிப்பின் போதும் நடந்திருக்கிறது. நந்தா படத்தில் நடித்த போது சூர்யா, அப்போது அறிமுக நாயகன்தான். மௌனம் பேசியதே படம் மட்டும்தான் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை கொடுத்திருந்தது. நந்தா படத்துக்கு பிறகுதான் நாயகனாக ரசிகர்களால் வரவேற்கப்பட்டார்.

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறுகையில், நந்தா படத்தில் கதாநாயகியாக லைலா வேண்டாம். ஜோதிகாவை எனக்கு ஜோடியாக நடிக்க வையுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால், அந்த கேரக்டருக்கு லைலாதான் சரியாக இருப்பார் என்று பாலா நினைத்திருக்கிறார். இந்த கேரக்டரில் லைலாதான் நடிக்க வேண்டும், ஜோதிகா நடித்தால் சரியாக வராது. நீ ஏதும் லவ் பண்றியா? என்று கறாராக பேசி மறுத்துவிட்டார் என செய்யாறு பாலு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்