தெலுங்கு நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்தில் நடித்த பிறகு பான் இந்தியா ஸ்டார் நடிகராக மாறிவிட்டார். இந்தியா முழுவதும் முக்கிய நடிகராக ரசிகர்களால் அவர் கொண்டாடப்படுகிறார். அவரது நடிப்பில் ரூ. 800 கோடி பட்ஜெட்டில் கல்கி என்ற படம் உருவாகி உள்ளது. வரும் ஜூன் 27ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
இந்த படத்தின் டிரெயிலர் சில தினங்களுக்கு முன் வெளியான நிலையில், ஒரு தரப்பினர் டிரெயிலர் குறித்து ஆட்சேபனையாக சில கருத்துகளை தெரிவித்தாலும், இளம் வயதினர் மத்தியில் இந்த படத்தின் டிரெயிலர் வேற லெவலில் தரமான சம்பவமாக இருப்பதாகவும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இதுபோன்ற அட்வான்ஸ் திங்கிங் சயன்டிபிகல் படங்களை 80,90 கிட்ஸ் ரசிக்கவும், அதை ஏற்கவும் முடியாது. 2கே கிட்ஸ்க்குதான் இதுபோன்ற படங்களின் மதிப்பும், ரசிக்கவும் தெரியும் என்றும் கிண்டலடித்து சமூகவலைதளங்களில் கலாய்த்தும் வருகின்றனர். ஆக, கல்கி பட டிரெயிலருக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
சமீபத்தில், ஆந்திராவில் உள்ள தெலுங்கு வினியோகஸ்தர்களுக்கு இந்த படம் திரையிட்டு காட்டப்பட்ட நிலையில், அவர்கள் மத்தியில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று அவர்கள் படத்தை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் திரையரங்குகளில் வெளியிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் கல்கி படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதற்கான தியேட்டர்கள் உரிமை இன்னும் யாருக்கும் வழங்கப்படவில்லை. படத்தில் வில்லனாக நடித்துள்ள கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனத்தை இதற்காக பரிந்துரை செய்தார். ஆனால், இந்த நிறுவனத்தை பொருத்த வரை, படத்தை ப்ரீயாக வாங்கி, ரிலீஸ் செய்து பிறகு அதில் வரும் வருமானத்தில், தங்களது கமிஷனை எடுத்துக்கொண்டு மீதி லாபத்தை சரியாக கணக்கிட்டு, படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு தந்து விடுவதுதான் வழக்கம்.
ஆனால் கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் வரை பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கல்கி படத்தை அப்படி முன்பணேம இல்லாமல் ரிலீஸ் செய்ய தரமுடியாது. 30, 40 கோடி ரூபாயாவது முன்பணம் தரும் நிறுவனத்துக்கு தியேட்டர் ரிலீஸ் உரிமையை தர, கல்கி படத் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் ரூ. 2 கோடியை முன்பணமாக தந்து, கல்கி படத்தின் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமையை கேட்டுள்ளது. கடுப்பான கல்கி படத் தயாரிப்பாளர் அப்செட் ஆன நிலையில், ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு கல்கி படம் கிடையாது என திட்டவட்டமாகி கூறிவிட்டார். அதனால் கல்கி படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் வெளியிட வாய்ப்பில்லை.





