நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகையாக இருக்கிறார். ஒரு படத்தில் நடிக்க ரூ.8 கோடி முதல் ரூ. 12 கோடி வரை அவர் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு பிறகும் பட வாய்ப்புகள் அதிகமாக வந்த நிலையில், தொடர்ந்து தோல்வி படங்களால் இப்போது அவரது மார்க்கெட் சற்று சரிந்துள்ளது.
நடிகை நயன்தாரா, கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் அதிகமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர். அந்த வகையில், பிற ஹீரோக்கள் நடித்தாலும், தனக்கு ஹீரோயினுக்கு உரிய முக்கியத்தும் இருந்தால் மட்டுமே அந்த படங்களில் நடிக்க கமிட் ஆகிறார். அதுவும் விஜய், அஜீத், ஷாருக்கான் என டாப் ஹீரோக்களுடன் நடிக்க விரும்புகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் சரியாக ஓடவில்லை. இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில்தான் நடந்து வருகிறது. இதில் தன் பிள்ளைகள் உலக், உயிர் ஆகியோருடன் வந்து கலந்துக்கொள்கிறார் நயன்தாரா.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறுகையில், நடிகர் லெஜண்ட் சரவணன் அவர் நடிக்கும் படங்களில் பல விஷயங்களில் மிக கவனமாக இருப்பார். குறிப்பாக கதாநாயகி விஷயத்தில், தன் படத்தில் மாஸ் ஆன நடிகை நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.
அப்போது லெஜண்ட் சரவணா படத்தில் நடிக்க துவக்க சம்பளமாக ரூ. 2 கோடி பேசப்பட்ட போது நயன்தாரா மறுத்திருக்கிறார். சரி 10 கோடி ரூபாய் தருவதாக லெஜண்ட் சரவணன் கூறியிருக்கிறார். 100 கோடி ரூபாய் கொடுப்பதாக இருந்தாலும் அந்த படத்தில் நான் நடிக்கவே மாட்டேன் என கட் அண்ட் ரைட் ஆக பேசிவிட்டார் நயன்தாரா. இதனால் லெஜண்ட் சரவணன் அப்செட் ஆகியிருக்கிறார்.
இதையடுத்து நடிகை வசிக்கும் பகுதியில், அவரது லக்ஷரி பிளாட்டுக்கு எதிரில், லெஜண்ட் சரவணனும் பிளாட் வாங்கி குடியேறி இருக்கிறார். அப்போது தனது விலை உயர்ந்த, தமிழ் நடிகர்களிடம் இல்லாத லம்போகினி காரை, நயன்தாரா வசிக்கும் பிளாட்டுக்கு கீழே நிறுத்தியுள்ளார். அப்போதுதான் அது யாருடைய கார் என கேட்டு, நயன்தாரா உள்ளிட்டோர் ஷாக்காகி உள்ளனர் என, செய்யாறு பாலு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





