- Advertisement -
Homeபொழுதுபோக்குபள்ளி வளாகத்தில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுவன் - சூப்பர் ஸ்டார்...

பள்ளி வளாகத்தில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுவன் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்த தரமான சம்பவம்!

- Advertisement -

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முகமது யாசின் என்கிற சிறுவன், தனது பள்ளி வளாகத்தில் கண்டெடுத்த 50 ஆயிரம் ரூபாயை காவல்துறையிடம் ஒப்படைத்த தகவல் கடந்த வாரம் வைரலானது. அந்த சிறுவன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். தந்தை ஒரு டெய்லர். தாயார் வீட்டு வேலை செய்கிறார். சிறுவனிடம் முறையான சீருடைகள் மற்றும் பள்ளி உபகரணங்கள் கூட இல்லை.

இருப்பினும், அவ்வளவு பணம் கவனிக்கப்படாமல் கிடந்ததைக் கண்டதும் அந்த சிறுவன் உடனடியாக அதைத் தனது பள்ளித் தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தான். அவரும் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் பணத்தை ஒப்படைக்கச் செய்தார். சிறுவனின் இந்த உன்னதமான செயலைப் பாராட்டி போலீஸ் அதிகாரி வழங்கிய ரூ.1000 வெகுமதியைக்கூட அந்தச் சிறுவன் வாங்க மறுத்துவிட்டான்.

- Advertisement -

முகமது யாசினின் இந்தச் செயலைப் பற்றி அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுவன் மற்றும் குடும்பத்தை சென்னைக்கு நேரில் வரவழைத்து தனது போயஸ்கார்டன் வீட்டில் முகமது யாசினுக்கு ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசளித்துள்ளார். அந்தச் சிறுவனின் உண்மையான செயலை பாராட்டி இருக்கிறார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, நீங்க எல்லாம் கேள்விபட்டிருப்பீங்க. முகமது யாசின் பத்தி. பணம்தான் எல்லாத்துக்கும் முக்கியம். அப்படி பணத்துக்காக கொலை பண்றது கொள்ளையடிக்கிறது என்று மாறிவிட்ட இந்த காலத்தில் அப்படி கிடைத்த பணத்தை என் பணம் இல்லே, நான் உழைச்ச பணம் இல்லே. எனக்கு வேண்டாம் என்று இந்த பையன் திருப்பி கொடுத்திருக்கான் பாருங்க.

- Advertisement -

உண்மையில் மிகப்பெரிய குணம் அது. இந்த பையனை எப்படி வாழ்த்துவது என்றே தெரியவில்லை. இப்படி ஒரு பையனை பெத்தவங்களை, வளர்த்தவங்களை நான் மனசார பாராட்டுகிறேன். இப்போ அரசு பள்ளியில் பையன் படிச்சிட்டு இருக்கிறேன். இப்போது அங்கேயே படிக்கட்டும் என்று சொன்னேன்.

அதுக்கு அப்புறம் அவன் என்ன படிக்க ஆசைப்பட்டாலும் நான் வந்து இவனை படிக்க வைக்கிறேன். என் பையனா நான் எடுத்துக்கறேன் என்று நான் சொல்லி இருக்கிறேன். டெபனட்லி இந்த மாதிரி பசங்க என்பது ஒரு பெரிய இன்ஸ்பிரேசன், ரொம்பவும் பெருமையாக இருக்கிறது. இந்த பையனை நான் வாழ்த்துகிறேன் நன்றி என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்