தமிழ் சினிமாவில் தனது வசீகரமான குரலால் அழகால் ரசிகர்களை கவர்ந்தவர் பாத்திமா பாபு. கடந்த 1980களில் தூர்தர்ஷன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இனிமையான குரலில் பேசி மக்கள் மனதில் இடம் பிடித்தவர். பிறகு ஒரு காலகட்டத்தில் இவர் திரைப்படங்களிலும் டிவி சீரியல்களிலும் நடித்து மக்களின் வரவேற்பை பெற்றார்.
குறிப்பாக கதாநாயகிகளின் அம்மாவாக பல படங்களில் நடித்தார். இன்னும் பல படங்களில் அண்ணி சித்தி அக்கா டாக்டர் வக்கீல் போன்ற கேரக்டர்களிலும் பாத்திமா பாபு நடித்திருக்கிறார். எப்படிப்பட்ட கேரக்டர் என்றாலும் அதில் சிறப்பான நடிப்பை பாத்திமா பாபு வெளிப்படுத்தி விடுகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை பாத்திமா பாபு கூறியதாவது, எனக்கு பிடிக்கவே பிடிக்காத விஷயம் என்றால் அது பொய் சொல்வது தான். நான் இதுவரை எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்லியதே இல்லை. அதுபோல யாராவது என்னிடம் பொய் சொன்னார்கள் என்றால் தெரிந்து விட்டால் அவர்கள் யார் என்றாலும் நேரடியாக சண்டை போடுவேன்.
ஒரு பெண் என்னிடம் பொய் சொன்னது தெரிய வந்ததும் நான் காரை நிறுத்தி அவளை இறக்கிவிட்டு நேராக கிளம்பி வந்து விட்டேன். அந்த அளவுக்கு பொய்யை நான் வெறுக்கிறேன். எனக்கு இப்போது 62 வயதாகிறது. என் வாழ்க்கையில் பெரிதாக உடல்நல பிரச்சனைகள் வந்ததே இல்லை. 10ம் வகுப்பு படிக்கும் போது ஒருமுறை உடல் நலம் பாதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா காலகட்டத்தில் சில பாதிப்புகள் வந்தன. இந்த வயதிலும் பிபி சுகர் என எதுவுமே இல்லை.
இதற்கு காரணம் நான் எந்த விஷயத்தையும் கஷ்டத்தையும் மனதில் வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டதே இல்லை. அதுதான் என் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம். இந்த காலத்து பசங்க பெற்றோருக்கு மரியாதை கொடுப்பதே இல்லை. எல்லாம் நமக்கு தான் தெரியும் என்கிற போக்கில் நடந்து கொள்கின்றனர். ஆனால் நாங்கள் வளர்ந்த காலத்தில் என் அப்பாவை போல யாரும் வரமுடியாது என்று பெருமைப்பட்டோம். பெற்றோருக்கு மரியாதை கொடுப்பது மிகவும் முக்கியம்.
இன்றைக்கு டீன் ஏஜில் இருப்பவர்கள் எந்த விதமான அட்வைஸையும் நாம் கொடுத்தாலும் அவர்கள் அதை புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. இதனால் அவர்களை வாழ்க்கையில் பட்டு பல விஷயத்தை தெரிந்து கொண்டால் மட்டும்தான் வாழ்க்கை என்றால் என்ன என்பது தெரியும் என்று நடிகை பாத்திமா பாபு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





