- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ்நாட்டில் ரஜினி படத்தின் வசூலை ஓரங்கட்டிய மலையாளத் திரைப்படம்... என்னடா இது சூப்பர் ஸ்டாருக்கு வந்த...

தமிழ்நாட்டில் ரஜினி படத்தின் வசூலை ஓரங்கட்டிய மலையாளத் திரைப்படம்… என்னடா இது சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை….

- Advertisement -

தற்போது இணையத்திலும் சரி சினிமாவிலும் சரி அதிகமாக பேசப்படும் ஒரே பெயர் மஞ்சும்மல் பாய்ஸ். சிதம்பரம் என்பவர் இயக்கியிருக்கும் இந்த மலையாள திரைப்படம், கேரளாவையும் தாண்டி தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் படத்தில் குணா படத்தின் காட்சிகள் இடம் பெற்றதுதான்.

2006 ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து வந்த ஒரு இளைஞர்கள் குழுவினர், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். அவர்களின் ஒருவர் குணா குகையில் இருக்கும் ஒரு பள்ளத்தில் விழ, மற்றொரு நண்பர் உயிரை பணய வைத்து காப்பாற்றினார்.

- Advertisement -

இதனை மையமாக வைத்து தான் தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. படம் எடுத்ததும் மிக ஜாலியாகவே நகர, எப்போது இளைஞர் குழிக்குள் விழுந்தாரோ அதன்பிறகு பரபரக்க வைத்தது. தேவையில்லாத ஒரு காட்சியை கூட படத்தில் இயக்குனர் சொருகாமல் இருந்தது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

படத்தின் இரண்டாம் பாதியில் தமிழ் வசனங்கள் பலவும் இடம்பெற்று இருப்பது, ரசிகர்களுக்கு புரியும் வகையிலே அமைந்துள்ளது. பாதி நேரம் பலர் தமிழிலே பேசுவதால், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் குணா படத்தின் பாடல் இடம் பெற்றிருப்பது ரசிகர்களை குதூகலிக்க வைத்துள்ளது. இப்போது வரை அதன் காட்சியை, ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு சிலாகித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரு வாரத்தில், கேரளாவை விட தமிழ்நாட்டிலேயே இந்த திரைப்படம் அதிக வசூலை பெற்றிருக்கிறது.

தமிழில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ப்ளூ ஸ்டார், லவ்வர் ஆகிய திரைப்படங்களின் வசூலை மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் முறியடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் ரஜினி நடிப்பில் வெளியான லால் சலாம் திரைப்படத்தின் வசூலையும் இந்த மலையாள திரைப்படம் தாண்டியுள்ளது. லால் சலாம் திரைப்படம் தமிழில் 15 கோடியே 35 லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்