- Advertisement -
Homeபொழுதுபோக்குநல்ல படங்களை மிஸ் செய்துவிட்டேன், அந்த படத்தில் நான் நடித்தது மிகப்பெரிய தவறு - நடிகர்...

நல்ல படங்களை மிஸ் செய்துவிட்டேன், அந்த படத்தில் நான் நடித்தது மிகப்பெரிய தவறு – நடிகர் கௌதம் கார்த்திக் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1960 – 70களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முத்துராமன். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் நடித்த காலகட்டத்தில் ஒரு நட்சத்திர நடிகராக முத்துராமன் இருந்தார். நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு மிகச் சிறந்த நடிகர் என்றால் அது முத்துராமன் தான் என்று கவிஞர் வாலியிடம் ஒருமுறை பேசும்போது எம்ஜிஆர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அந்த அளவுக்கு ஒரு சிறந்த நடிகர் முத்துராமன். அவரது மகன்தான் நவரச நாயகன் நடிகர் கார்த்திக். கடந்த 1980 – 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வந்தவர். நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக நடிப்பில் பல பரிமாணங்களை காட்டி ரசிகர்களின் மனங்களை வென்றவர் நடிகர் கார்த்திக்.

- Advertisement -

இந்நிலையில் முத்துராமனின் பேரனும் நடிகர் கார்த்திக்கின் மகனுமான கௌதம் கார்த்திக் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் கதாநாயகனாக கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார். இதுவரை மொத்தம் 16 படங்களில் கௌதம் கார்த்திக் நடித்து விட்டார். ஆனால் அவருக்கு இதுவரை பெயர் சொல்லும் படமாக பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. பல விஷயங்களை அவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்றடையவில்லை.

இதுவரை நாயகனாக நடித்த கௌதம் கார்த்திக் இப்போது வில்லன் ரோலில் நடித்துள்ள படம் மிஸ்டர் எக்ஸ் திரைக்கு வந்துள்ளது. இதுவரை ஹீரோவாக நடித்த கௌதம் கார்த்திக் இந்த முறை அதற்கு மாறாக ஆன்ட்டி ஹீரோ கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் கார்த்தி நடித்த கொம்பன் உள்ளிட்ட சில படங்கள் முதலில் நடிகர் கௌதம் கார்த்திக்கை தான் தேடி வந்தன.

- Advertisement -

ஆனால் கதை சரியில்லை என்று கௌதம் கார்த்திக் அந்த படங்களை நிராகரித்துள்ளார். உண்மையில் அந்த படங்களில் நடித்திருந்தால் அவரது மார்க்கெட் நல்ல நிலைமைக்கு வந்திருக்கும். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கௌதம் கார்த்திக் கூறியதாவது, முத்துராமலிங்கம் என்ற படத்தில் நான் நடித்திருக்கக் கூடாது. அந்த கதையை தேர்வு செய்ததற்காக வருத்தப்படுகிறேன். அறிவின்மையாலும் புரிதல் இல்லாததாலும் அந்த படத்தில் நான் நடித்தேன். அது பெரிய தோல்வியை தந்து விட்டது.

பின்னர் அந்த மாதிரி ஜாதி படங்களை தவிர்த்து விட்டேன். பின்னர் இயக்குனர் முத்தையாவிடம் தேவராட்டம் படத்தில் நடித்தேன். இப்போதும் அப்படிப்பட்ட மாஸ் படங்களில் நடிக்க பயமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அவரது இந்த கருத்து தற்போது சினிமா வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் வெளியான முத்துராமலிங்கம் படத்தை ராஜதுரை டைரக்ட் செய்திருந்தார். நடிகர் கௌதம் கார்த்திக் நெப்போலியன் பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஆனால் இந்த படம் பெரிய வரவேற்பு பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்