- Advertisement -
Homeபொழுதுபோக்குஜே பேபி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் வெங்கட்பிரபு - GOAT படம்...

ஜே பேபி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் வெங்கட்பிரபு – GOAT படம் குறித்து சொன்ன லேட்டஸ்ட் அப்பேட்

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சென்னை, ஐதராபாத், துருக்கி, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில், இரு தினங்களாக சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் விஜய் நடித்த பிரமாண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படக்குழு ரஷ்யா செல்ல, விசா கிடைப்பதில் தாமதம் நீடிப்பதால் அதுவரை மீதி ஒரு ஷெட்யூலை ஐதராபாத்தில் முடித்துவிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அங்கு எடுத்தது போக மீதிக்காட்சிகளை ரஷ்யாவில் சென்று படம்பிடிக்கவும், இயக்குநர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

நடிகர் விஜயை பொருத்தவரை, இந்த மாத இறுதிக்குள் இந்த படத்தை முடித்துவிட்டு, தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சி பணிகளில் தீவிரம் காட்ட ஆர்வமாக இருந்து வருகிறார். அடுத்த மாதம் மதுரையில் கட்சி மாநாடு நடத்தவும், அதற்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவை தெரிந்துகொள்ளவும் அவர் மும்முரமாக இருந்து வருகிறார். அடிக்கடி தனது ஆலோசகர் புஸ்லி ஆனந்திடம் கட்சி பணிகள் குறித்து ஆலோசித்தும் வருகிறார்.

இதற்கிடையே கோட் படத்தின் அப்டேட் என்னவென்று அறிந்துக்கொள்வதில் விஜய் ரசிகர்கள் மிகவும் ஆசையாக இருக்கின்றனர். வெங்கட்பிரபுவை வலைப்பக்கத்தில் தொடர்பவர்களும், நேரில் சந்திப்பவர்களும் கோட் படம் குறித்து ஏதேனும் புதிய அப்டேட் கொடுங்கள் என கேட்டு வருகின்றனர். இப்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நிலையில், கோட் அப்டேட் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

- Advertisement -

வெங்கட்பிரபுவின் முன்னாள் உதவி இயக்குநர் ரஞ்சித் தயாரித்த, ஜே பேபி என்ற புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெங்கட்பிரபு கலந்துக்கொண்டார். விழா முடிந்த பின்பு கோட் படப்பிடிப்புக்கு தாமதமாகி விட்டதாக, நண்பர் ஒருவரது பைக்கில் புறப்பட்டுச் சென்றார்.

அவர் புறப்படுவதற்கு முன் அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, கோட் படத்தின் அப்டேட் கொடுக்கலாம். ஆனால், ரொம்ப சீக்கிரமா கொடுக்கற மாதிரி இருக்கும். கரெக்டான டைம்ல அப்டேட் கொடுக்கலாமுன்னு வெயிட் பண்றோம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். பெரிய போஸ்ட் புரடக்சன் உள்ள படம் இது. இப்பக்கூட ஷூட்டிங் போய்ட்டு இருக்கு. கோட் படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது, என்று கூறினார் வெங்கட்பிரபு

- Advertisement -

சற்று முன்