- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை 2 எப்போ ரிலீஸ் ஆகப் போகுதுன்னு தெரியுமா? வெற்றிமாறனே சொன்ன தகவல் - போய்...

விடுதலை 2 எப்போ ரிலீஸ் ஆகப் போகுதுன்னு தெரியுமா? வெற்றிமாறனே சொன்ன தகவல் – போய் எல்லோரும் பொழப்பை பாருங்கப்பா

- Advertisement -

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தை இயக்கியவர் வெற்றிமாறன். இதுதான் அவரது முதல் படம். மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பைக்கை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில்தான், கிஷோர் என்ற சிறந்த நடிகரை வெற்றிமாறன், சினிமாவுக்குள் கொண்டு வந்தார். அடுத்து ஆடுகளம் படம் வேற லெவலில் வெற்றியை பேசியது. சேவல் சண்டையை மையப்படுத்திய இந்த படமும் சிறந்த படைப்பாக அமைந்தது.

தொடர்ந்து வடசென்னை, அசுரன் படங்களை அடுத்து, விடுதலை படத்தை இயக்கினார் வெற்றிமாறன். காமெடி படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் சூரியை கதாநாயகனாக மாற்றியவர் இயக்குநர் வெற்றிமாறன். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலை படம் ரிலீஸ் ஆனது. விஜய் சேதுபதி வாத்தியார் என்ற முக்கிய கேரக்டரில் நடந்த இந்த படத்தில், இளையராஜா இசையில் பாடல்கள் ஹிட் அடித்தன.

- Advertisement -

கடந்தாண்டிலேயே இந்த படத்தின் 2ம் பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி வரை வெளியாகவில்லை. மாதக் கணக்ககில் படப்பிடிப்பு நடத்தப்பட்டும் இன்னும் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. விடுதலை 2ம் பாகத்தில் மஞ்சு வாரியார், விஜய் சேதுபதி, கென்னி கருணாஸ் போன்றவர்கள் முக்கிய பாத்திரங்களாக இருப்பதால், அவர்கள் சார்ந்த கிளை கதைகளும் இருப்பதால் படம் இன்னும் தாமதமாகும் என்று தெரிய வந்துள்ளது.

பெரும்பாலும் 2 பாக படங்கள் என்றால், முதல் பாகம் எடுக்கப்படும் போதே, அதன் தொடர்ச்சியான காட்சி அப்போதே எடுக்கப்பட்டு விடும். அதுதான் இயக்குநர்களின் வழக்கம். ஏனெனில் அப்போதுதான் தயாரிப்பு செலவு குறையும். நடிகர்களின் கால்ஷீட் மீண்டும் தேவைப்படாது. ஏகப்பட்ட நேர விரயமும் தவிர்க்கப்படும்.

- Advertisement -

பொன்னியின் செல்வன், பாகுபலி போன்ற பல படங்கள், அப்படித்தான் முதல் பாகம் எடுக்கும்போதே 2ம் பாகத்துக்கான 70 சதவீத காட்சிகள், தொடர்ச்சியாக எடுத்து முடிக்கப்பட்டது. அதன்பிறகு 2ம் பாகம் என்பது அடுத்த ஆறு மாதங்களில் வெளியாகும் போது, படம் பார்த்த ரசிகர்களுக்கும் ஒருவித திருப்தி ஏற்பட்டது. இரண்டு படங்களுக்கும் ஒருவித கனெக்ட்விடி இருப்பதை ரசிகர்களும் உணர முடிந்தது.

ஆனால் விடுதலை படத்தின் படப்பிடிப்பு இன்னும் குறைந்த பட்சம் 5 மாதங்கள் வரை படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. அதாவது மஞ்சுவாரியார், விஜய் சேதுபதி, கென்னி கருணாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகளவில் எடுக்கப்பட இருப்பதால், வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் விடுதலை 2 ரிலீஸ் ஆகலாம். அல்லது போஸ்ட் புரடக்சன் பணிகளுக்காக இன்னும் சில மாதங்கள் நீடிக்கவும் வாய்ப்புள்ளது. அதனால் இப்போதைக்கு விடுதலை 2 படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்கள், ஆறு மாதங்களுக்கு மேல் பொறுத்திருக்க வேண்டும்.

- Advertisement -

சற்று முன்