குறுகில காலத்தில் தமிழ் சினிமாவில் மிக பிரபலமடைகிற வாய்ப்பு மிக சிலருக்கு தான் அமைகிறது. சிலர் ஒரே படத்தில் பிரபலமடைந்தாலும் அடுத்தடுத்த படங்களில் சரியாக வாய்ப்பு அமையாவிட்டால், ரசிகர்கள் எளிதாக புறக்கணித்து விடுவர். அப்படி காணாமல் போன நடிகர்கள், நடிகைகள் பலபேர் உண்டு.
ஆனால் ஏதோ சுக்கிர திசை அடித்தது போல, விஜய் டிவியில் காம்பியராக இருந்த சிவகார்த்திகேயன், திடீரென மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் ஹீரோ நடிகராக மாறினார். அடுத்து ரஜினி முருகன், ரெமோ, காக்கிச்சட்டை, வேலைக்காரன் என அடுத்தடுத்த படங்களில் வேற லெவல் நடிகராக மாறி, முன்னணி ஸ்டார் நடிகராக இப்போது வலம் வருகிறார்.
மிக நல்ல நடிகர், பக்கத்து வீட்டு பையன் போல இருக்கிறார் என கவனிக்கப்பட்ட சிவகார்த்திகேயனுக்கு, பேமிலி ஆடியன்ஸ் அதிகம். ரஜினி, விஜய் படங்களுக்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகம். அதுபோல் சிவகார்த்திகேயன் படம் என்றாலும் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு வரும் ரசிகர் கூட்டம் அதிகம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரது படங்கள் பல சரியாக ஓடவில்லை. குறிப்பாக டான், ஹீரோ, மிஸ்டர் லோக்கல், பிரின்ஸ் உள்ளிட்ட படங்கள் செம மொக்கை படங்களாக பிளாப் ஆனது. டாக்டர், மாவீரன் படங்கள் நன்றாக ஓடிய நிலையில், சமீபத்தில் வெளியான அயலான் படமும் பிளாப் ஆனது. இப்போது ராஜ்கமல் பிலிம் தயாரிப்பில் வெளிவர உள்ள அமரன் படத்தை, சிவகார்த்திகேயன் பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய், அரசியல்வாதியாக மாறிவிட்ட நிலையில், இன்னும் ஒரு படத்தில் நடித்துவிட்டு அவர், முழுமையாக நடிப்புக்கு முழுக்கு போட உள்ளதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதனால் விஜய் இடத்தை அடுத்து பிடிக்கப் போவது நடிகர் சிவகார்த்திகேயன்தான் என்ற பேச்சு கோலிவுட்டில் பரவலாக அடிபட்டு வருகிறது. அதற்கேற்ப அவ்வப்போது சிவகார்த்திகேயன் நடவடிக்கையும் அமைந்து வருகிறது.
சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சந்திப்பு கூட்டம் நடத்திய நடிகர் சிவகார்த்திகேயன், எனக்கு அப்பா இல்லே, அண்ணன் இல்லே. அதனால் என் வலி, சோகம், ஏமாற்றம், துரோகம், தோல்வி எல்லாவற்றையும் ரசிகர்களாகிய உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள முடியும் என்று உருக்கமாக, சினிமா வசனம் போல பேசியிருக்கிறார். ஆனால் கடைசி வரை எந்த வலியை பற்றியும் ரசிகர்கள் முன்னிலையில் அவர் பேசவே இல்லையாம். இதனால் ரசிகர்கள் நொந்துபோய், பில்டப் பண்ணின அளவுக்கு அவர் ஒண்ணுமே பேசலையே என்று அவரது ரசிகர்களே புலம்பி உள்ளனர்.





