- Advertisement -
Homeபொழுதுபோக்கு20 ஆண்டுகளாக கவுண்டமணியை பாடாய் படுத்திய அந்த விஷயம், எப்படியோ ஒரு வழியா தீர்வு கிடைச்சுடுச்சு...

20 ஆண்டுகளாக கவுண்டமணியை பாடாய் படுத்திய அந்த விஷயம், எப்படியோ ஒரு வழியா தீர்வு கிடைச்சுடுச்சு – நக்கல் நாயகனுக்கே இப்படி ஒரு பிராப்ளமா?

- Advertisement -

நடிகர் கவுண்டமணி என்றாலே நக்கல் நாயகன். மற்றவர்களை கிண்டலடிப்பதும், நக்கலாக பேசுவதும், கலாய்ப்பதும், பங்கம் செய்வதும் என எத்தனை விதமாக சொன்னாலும் அந்த விஷயத்தில் கவுண்டமணி கில்லாடி தான். சில சமயங்களில் ரஜினி, கமலை கூட கவுண்டமணி பயங்கரமாக கலாய்த்து விடுவார். மற்ற காமெடி நடிகர்கள் என்றால் இது பிரச்னைதான். ஆனால் கிண்டலடிப்பது கவுண்டமணி என்றால் ரஜினி, கமல் கூட ஆப்தான்.

குறிப்பாக இந்தியன் படத்தில், கமல்ஹாசனையே இங்கே சந்துரு ன்னு ஒரு மானஸ்தான் இருந்தான் என கிண்டலடிப்பார். இப்போது அதைதான் திமுகவிடம் ஒரு சீட்டுக்கு ஒத்துக்கொண்ட கமலை கிண்டலடிக்க ட்ரோல் செய்து வருகின்றனர். அதே போல் ரஜினியை, பாபா படத்தில் பல காட்சிகளில் கவுண்டமணி ஓட்டியிருப்பார். ஆனால் ரஜினி அதற்கு சிரித்துக்கொள்வார்.

- Advertisement -

கவுண்டமணியை பொருத்த வரை சினிமாவில் இருந்தாலும் யதார்த்தவாதி. இயல்பானவர். சினிமா நடிகருக்குரிய இமேஜ் இருந்தாலும் அதையும் தாண்டிய யதார்த்த வாழ்க்கைக்குள் இருப்பவர். அதனால் எந்த விஷயத்தையும் அவர் நடிகராக அணுகாமல், மனிதராக மட்டுமே அணுகுவார். பொது இடங்களில் அவரது செயல்பாடுகள் அப்படிதான் இருக்கும். ஆனால் அப்படிபட்ட கவுண்டமணியே 20 ஆண்டுகளாக ஒரு பிரச்னைக்குள் சிக்கிய விஷயம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதாவது, கடந்த 1996ம் ஆண்டு கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில், 22,700 சதுர அடியை இடத்தை, நளினிபாய் என்பவரிடம் இருந்து கவுண்டமணி விலைக்கு வாங்கியுள்ளார். அந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட ஸ்ரீ அபிராமி பவுண்டேசன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் இடத்தை ஒப்படைத்தார். 15 மாதங்களில், கட்டுமான பணியை முடிக்கவும், கட்டுமான பணிகளுக்கு 3.58 கோடி ரூபாய் கவுண்டமணி தரப்பில் தருவதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

- Advertisement -

கடந்த 1996 முதல் 1999ம் ஆண்டு வரை கவுண்டமணி தரப்பில் இருந்து, அந்த கட்டுமான நிறுவத்துக்கு ரூ. 1.04 கோடி ரூபாய் கட்டுமான பணிகளுக்காக தரப்பட்டது. ஆனால் 2003ம் ஆண்டு வரை நடிகர் கவுண்டமணிக்கு சொந்தமான இடத்தில், ஸ்ரீ அபிராமி பவுண்டேசன் கட்டுமான பணியை துவக்கவில்லை. இதையடுத்து கவுண்டமணி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், 46.51 லட்சம் ரூபாய்க்கு கட்டுமான பணிகள் நடந்துள்ளதாக, கட்டுமான நிறுவனம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், கவுண்டமணிக்கு சொந்தமான இடத்தை திருப்பி ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டதோடு. கவுண்டமணி, அவரது மனைவி, மகள்கள் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு 2008ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தலா ஒரு லட்சம், இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது. இதுகுறித்து கட்டுமான நிறுவனம் செய்த மேல் மூறையீட்டை, கோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் 20 ஆண்டு கால சட்டப் போராட்டத்தில் கவுண்டமணி வெற்றி பெற்று, தனது நிலத்தை மீட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்