- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி 173 படப்பிடிப்பு துவக்கம் எப்போது? அதை நடிகர் சிம்பு தாங்க முடிவு பண்ணி சொல்லனும்...

ரஜினி 173 படப்பிடிப்பு துவக்கம் எப்போது? அதை நடிகர் சிம்பு தாங்க முடிவு பண்ணி சொல்லனும் – கோலிவுட்டில் தீயாக பரவிய தகவல்!

- Advertisement -

தக்லைஃப் படத்துக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார். அந்த படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்ட் செய்வதாக இருந்தது. இந்த படத்தில் சிம்புவுடன் காமெடி ரோலில் நடிக்க நடிகர் சந்தானமும் கமிட் செய்யப்பட்டார். இதற்காக சிம்பு சந்தானம் இருவருக்குமே கணிசமான அட்வான்ஸ் தொகையை டான் பிக்சர்ஸ் வழங்கியது.

இந்நிலையில் அமலாக்கத்துறை சோதனையில் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் மீது புகார் எழுந்ததால் சிம்பு படம் உருவாகாமல் தடைபட்டது. அதனால் வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தில் கமிட் ஆன சிம்பு அந்த படத்தில் நடிக்க தயாராகி விட்டார். அதனால் சிம்பு சந்தானமும் இருவரும் கொடுத்த அட்வான்ஸ்சை டான் பிக்சர்ஸ் நிறுவனம் திருப்பி தருமாறு கேட்டு வருகிறது.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ரஜினிகாந்த் கமிட் ஆனார். இது அவரது 173வது படமாகும். ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த படத்தை துவங்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த படத்தை இயக்க முதலில் கமிட் ஆன சுந்தர் சி இதில் இருந்து விலகி விட்டார்.

இதைத் தொடர்ந்து பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிம்புவுக்காக எழுதிய கதையில் ரஜினிக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து ரஜினியிடம் கதை சொன்ன நிலையில் ரஜினிக்கு கதை மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதனால் இந்த படத்துக்கு உடனே ஓகே சொல்லி விட்டார். அதனால் சிம்புவுக்கு சொன்ன கதையில்தான் இப்போது ரஜினி நடிக்க உள்ளார்.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர் சிம்பு மீண்டும் டான் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பார்க்கிங் பட இயக்குனர் சொன்ன கதையில் நான்தானே நடிக்க கமிட் ஆனேன் என்று ஏதேனும் பிரச்னை செய்தால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் இருந்து வருகிறார். அதனால் ரஜினி படத்துக்கு என்ஓசி தருவதில் பெரிய குழப்பம் நீடிக்கிறது. ஏனென்றால் இந்த படத்தை தயாரிக்க போவது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான். டான் பிக்சர்ஸ் இல்லை.

எனவே சிம்பு தரப்பில் இருந்து ஓகே சொன்னால் மட்டுமே ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ள ரஜினி 173 படத்துக்கு டான் பிக்சர்ஸ் நிறுவனம் என்ஓசி தர முடியும் என்ற சிக்கல் உருவாகி உள்ளது. சிம்பு தாமதிக்கும் பட்சத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கும் தாமதமாகும் ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் ரஜினி கமல் இருவருக்குமே சிம்பு நெருக்கமானவர் என்பதால் இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு கிடைத்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்