விக்னேஷ் சிவன் இயக்கிய “நானும் ரவுடிதான்” திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க விஜய் சேதுபதி அத்திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தின் போதே நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டுவிட்டது.

அதன் பின் பல வருடங்கள் காதலித்து வந்த இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின் சில மாதங்களிலேயே வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளையும் பெற்றுக்கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை நாம் பார்த்திருப்போம்.
விக்னேஷ் சிவன் சமீபத்தில் “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால் சில காரணங்களால் விக்னேஷ் சிவன் அந்த புராஜெக்டில் இருந்து வெளியேறிவிட்டார்.

தற்போது விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நயன்தாராவுடன் ஏற்பட்ட சண்டை குறித்தான சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது “நானும் ரவுடிதான்” திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் ஒரு காட்சியை படமாக்கியபோது நயன்தாராவின் கூந்தல் காற்றில் அலையாடுவது போன்ற ஒரு காட்சியை படமாக்க வேண்டும் என விக்னேஷ் சிவன் திட்டமிட்டாராம். ஆனால் நயன்தாரா அவரது தலைக்கு Hair Band போட்டிருந்தாராம். ஆதலால் விக்னேஷ் சிவன், அந்த Hair Band-ஐ கழட்டிவிடுங்கள் என கூறினாராம்.

அதற்கு நயன்தாரா, “நான் Hair Band போட்டு இருப்பதுதான் இந்த படத்தின் முழு தோற்றமே. அப்படி இருக்கும்போது ஏன் இதை கழட்ட வேண்டும்” என கூறினாராம். அதற்கு விக்னேஷ் சிவன், “அது சரிதான் மேடம், ஆனால் ஒரே ஒரு ஷாட் மட்டும் விரிந்த கூந்தலோடு எடுத்துக்கொள்கிறேன்” என்று கூறினாராம். இது சம்பந்தமாக இருவருக்கிடையே விவாதங்கள் ஏற்பட்டதாம். எனினும் நயன்தாரா அந்த ஒரு காட்சிக்காக Hair Band-ஐ கழட்டிவிட்டாராம். ஆனால் விக்னேஷ் சிவனோ அந்த காட்சியை படத்தில் பயன்படுத்தவில்லையாம். கடைசியில் நயன்தாரா சொன்னதுதான் சரியானது என உணர்ந்துகொண்டாராம்.





