- Advertisement -
Homeபொழுதுபோக்குமூத்த நடிகர் கொடுத்த ஐடியாவால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அசிங்கப்பட்ட நடிகர் மாதவன் - இதை எல்லாம்...

மூத்த நடிகர் கொடுத்த ஐடியாவால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அசிங்கப்பட்ட நடிகர் மாதவன் – இதை எல்லாம் முதலிலேயே யோசிக்கணும் ப்ரோ

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மாதவன். பல வெற்றிப் படங்களில் நடித்தவர். அலைபாயுதே மூலம் அறிமுகமான அவர் ரன். ஜே ஜே, மின்னலே, அன்பே சிவம், டும் டும் டும், ஆய்த எழுத்து, ப்ரியமான தோழி, ஆரியா, மன்மதன் அம்பு, வேட்டை, இறுதிச்சுற்று என பல படங்களில் தமிழில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர்.

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமான மாதவன் என்கிற மாகி மீது கல்லூரி பெண்களுக்கும், இளம் பெண்களுக்கும் எப்போதுமே கிரஷ் ஜாஸ்திதான். ஆனால் இப்போது வயது 50களை தொட்ட நிலையில், நரைத்த தாடி, மீசையுடன் சினிமா நிகழ்ச்சிகளில் மாதவன் காணப்படுகிறார். எனினும் இன்னும் நடிப்பில் தன் இளமையை, திறமையை நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்.

- Advertisement -

தமிழில் அன்பே சிவம் படத்தில், கமலுடன் பல காட்சிகளில் இயல்பான நடிப்பை தந்திருப்பார். கமல்ஹாசனுக்கு மிக பிடித்தமான நடிகர்களில் மாதவன் குறிப்பிடத்தகுந்தவர். அதே போல் மன்மதன் அம்பு படத்திலும், கமல்ஹாசனுடன் மாதவன் நடித்திருப்பார். உலகநாயகன் தனக்கு இணையாக நடிக்கும் ஒரு வாய்ப்பை அடுத்த தலைமுறைக்கு தருகிறார் என்றால் அது லேசுப்பட்ட விஷயமல்ல.

நடிகர் ரகுவரன் ஒரே காட்சியில் தன்னை விழுங்கி விடுவார் என்பதால், கடைசி வரை தன் படங்களில் நடிக்க ரகுவரனுக்கு வாய்ப்பு தராதவர் கமல்ஹாசன் என்ற பேச்சு, நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. வடிவேலுக்கு மட்டுமல்ல, தன்னை மீறி யாரும் தன் படத்தில் நடித்து விடக்கூடாது என்ற எண்ணம் நடிகர் கமல்ஹாசனுக்கும் உண்டு. ஆனால் மாதவன் நடிப்பை வியந்து அவருக்கு வாய்ப்பு தருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் வெளியான சைத்தான் என்ற படத்தில் மாதவன், ஜோதிகா நடித்திருந்தனர். இந்த படம் வெற்றி பெற்றது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மாதவன், 3 இடியட்ஸ் என்ற படத்தில் நடித்த போது, உண்மையில் குடிபோதையில் நடித்தது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் மாதவன்.

அந்த படத்தில் நடித்த போது, குடிபோதையில் இருப்பது போன்ற ஒரு காட்சிக்கு உண்மையிலேயே குடித்துவிடலாம் என்று மூத்த நடிகர் அமீர்கான் கூறியதால், படப்பிடிப்பு துவங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன் உண்மையிலேயே குடித்திருக்கின்றனர். போதையில் நார்மலாக இருப்பது போல காட்டிக்கொண்டாலும், அந்த காட்சியில் வசனங்களை பேச முடியாமல் மாதவன் திண்டாடி திணறியிருக்கிறார். இதைப் பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு போதை தெளிந்த பிறகு சில மணி நேரங்கள் கழித்து, அந்த காட்சிகளை படம்பிடித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்