தமிழ் சினிமாவில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்தவர் அருள்நிதி. ஆனாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பிரபலமான நடிகராகதான் அவர் இருந்து வருகிறார். அவர் அறிமுகமான முதல் படம் வம்சம். அந்த படத்திலேயே அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அருள்நிதி அவர் நடிக்கும் படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுகிறார். அதேபோல் அவர் நடித்த தகராறு, படத்தில் ஆக்சன் கேரக்டரில் மிக அற்புதமாக நடித்திருந்தார். அடுத்து மெளனகுரு, ஆறாது சினம், பிருந்தாவனம், நாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும் என பல படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அருள்நிதி இதுவரை நடித்த படங்களில் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக பெரிய வெற்றியையும் ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்த படம் டிமான்டி காலனி. கடந்த 2015ம் ஆண்டில் இந்த படம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்தது. இந்த படம் திகில் திரில்லர் படமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படமாக அமைந்தது.
இப்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டிமாண்டி காலனி 2 கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீசானது. தங்களான், டிமாண்டி காலனி, ரகுதாத்தா ஆகிய மூன்று படங்களும் ஒரே நாளில் ரிலீஸான நிலையில், டிமாண்டி காலனி 2 படம் தங்கலான், ரகுதாத்தா படங்களை காட்டிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பலத்த பாராட்டையும் பெற்றது.
இந்த படத்தில் அருள்நிதி கம்பேக் கொடுத்தார் என்று சொல்லும் அளவுக்கு அவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. டிமான்டிக் காலனி 2 படமும் அதில் இடம்பெற்ற திரில்லான காட்சிகளும் ரசிகர்களை அப்படியே மிரட்டி விட்டன. குறிப்பாக இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நடிப்பு வேற லெவலில் இருந்தது. அவர் ஒரு ராசியிலாத நடிகை என்ற சென்டிமென்டை அடித்து நொறுக்கி தூள் தூளாக்கும் விதமாக இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று அபாரமான வசூல் சாதனை புரிந்தது.
இந்நிலையில் அடுத்ததாக அருள்நிதி ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பம்பர் பட இயக்குனர் எம் செல்வகுமார் இயக்குகிறார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் டைரக்டர் அமீர் நடிக்கிறார். இதற்காக நடிகர் அமீரை போனில் தொடர்பு கொண்ட நடிகர் அருள்நிதி, இந்த கேரக்டரில் நீங்கள் நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும். உங்களை தவிர வேறு யார் நடித்தாலும் அந்த கேரக்டர் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று சொல்லி அவரிடம் நேரடியாக பேசி, இந்த படத்தில் நடிக்க சம்மதம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





