- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யாவுக்கு நன்றி சொல்ல மறந்த பராசக்தி படக்குழு - வள்ளுவர் கோட்டம் கண்காட்சி பின்னணியில்...

நடிகர் சூர்யாவுக்கு நன்றி சொல்ல மறந்த பராசக்தி படக்குழு – வள்ளுவர் கோட்டம் கண்காட்சி பின்னணியில் இப்படி ஒரு சம்பவமும் நடந்திருக்கா?

- Advertisement -

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 10 நாட்களாக ‘வோர்ல்டு ஆப் பராசக்தி’ என்ற பெயரில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் குறித்த அந்த கால காட்சிகள் ஷெட்டுகளாக அமைக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் கோட்டத்துக்கு செல்லும் பொதுமக்கள், சினிமா ரசிகர்கள் அவற்றை பார்வையிட்டு ரசித்து வருகின்றனர்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ரவிமோகன் அதர்வா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்துக்கு இது ஒரு நல்ல விளம்பரமாக அமைந்துள்ளது. இந்த கண்காட்சியின் துவக்க விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று பேசியதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த 1960 முதல் 1965ம் காலகட்டத்தில் மெட்ராஸ் வாழ்க்கை அன்றைய காலகட்டத்தில் எப்படி இருந்தது என்பதை விளக்கும் விதமாக வள்ளுவர் கோட்டத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள பழங்கால ஷெட்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதை நேரில் காணும் இளம் வயதினருக்கு பலத்த ஆச்சரியத்தை தருகிறது.

ஆனால் இந்த ஷெட்டுக்கான மொத்த செலவும் நடிகர் சூர்யாவுடையது என்ற புதிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. முதலில் பராசக்தி படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆனவர் நடிகர் சூர்யா தான். அவரது 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்கவும் இருந்தது.

- Advertisement -

அப்போது ரூ. 10 கோடி வரை தயாரிப்பாளர் என்ற முறையில் சூர்யா ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளுக்காக செலவு செய்துள்ளார். அப்போதே இப்படி வள்ளுவர் கோட்டத்தில் பழங்கால ஷெட் அமைக்க திட்டமிட்டு அதற்கான ஒரு பெருந்தொகையை சூர்யா ஒதுக்கி தந்துள்ளார். அதனால் வள்ளுவர் கோட்டத்தில் போடப்பட்டுள்ள இந்த ஷெட் முழுக்க நடிகர் சூர்யாவின் செலவில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

அப்போது ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளுக்காக ரூ. 10 கோடி வரை சூர்யா செலவு செய்த நிலையில் ரூ. 4 கோடி தான் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு திருப்பி தரப்பட்டுள்ளது. ஆனால் மீதி 6 கோடி ரூபாயை சூர்யா திரும்பவும் கேட்கவில்லை. சூரரைப் போற்று படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்தோம் என்ற முறையில் நட்பு ரீதியாக அதை விட்டு கொடுத்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் படக்குழு தரப்பில் வள்ளுவர் கோட்டத்தில் இந்த ஷெட் அமைக்க உதவிய சூர்யாவுக்கு நன்றி என்ற அறிவிப்பு வைத்திருக்கலாம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்