- Advertisement -
Homeபொழுதுபோக்குஏற்றிவிட்ட ஏணியை தூக்கி எறிந்த டாப் ஸ்டார் நடிகர்கள், இப்படி நன்றி மறக்கலாமா? - தமிழ்...

ஏற்றிவிட்ட ஏணியை தூக்கி எறிந்த டாப் ஸ்டார் நடிகர்கள், இப்படி நன்றி மறக்கலாமா? – தமிழ் சினிமா வளர்ச்சிக்கு இது நல்லதில்லையே?

- Advertisement -

ஒரு படம் உருவாக நடிகர், இயக்குனர் மட்டும் போதாது. கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் வேண்டும். தயாரிப்பாளர் இல்லை என்றால் கதையை வைத்துக்கொண்டு, நடிப்புத்திறமையை வைத்துக்கொண்டு அதை மக்கள் முன்னால் ஒரு படைப்பாக, திரைப்படமாக கொண்டு வந்து காட்டிவிட முடியாது. ஒரு படம் உருவாக அடிப்படை ஆணிவேரே தயாரிப்பாளர்தான்.

தமிழ் சினிமாவில் பல தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் புதுமுக நடிகர்கள், புதுமுக இயக்குனர்களை நம்பி கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்கின்றன. சில நேரங்களில் அது வெற்றியை கொடுத்து அதிக லாபத்தை தருகிறது. சில நேரங்களில் மிக மோசமான தோல்வியை தந்து பெரிய நஷ்டத்தை தருகிறது. ஆனால் லாபமோ, நஷ்டமோ தொடர்ந்து தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் படம் எடுத்து வருகின்றனர்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் பான் இந்தியா படங்களை எடுப்பது அதிகரித்து விட்டதால், சின்ன தயாரிப்பாளர்களால் பெரிய பட்ஜெட் படங்களை எடுக்க முடிவதில்லை. பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் விரல்விட்டு எண்ணும் நிலையில்தான் உள்ளனர். அவர்களும் பல பெரிய ஹீரோக்களின் படங்களை எடுத்து, அவை பிளாப் ஆனதால் ஏகப்பட்ட நஷ்டங்களில் இருக்கின்றனர்.

ஆனால் அவர்கள் தயாரித்த படங்களில் நடித்து இன்று பெரிய ஸ்டார்களாக இருக்கும் நடிகர்கள், அவர்களை கைதூக்கி விட அவர்களது படங்களில் நடிக்க இப்போது தயாராக இல்லை. அதற்கு மாறாக இன்னும் அதிக சம்பளம் தரும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களை தேடிச் சென்று அந்த தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிக்கின்றனர். இன்னும் பெரிய லாபங்களை, சம்பளத்தில் பல கோடிகளை கூடுதலாக பெறுகின்றனர்.

- Advertisement -

விஜயின் 69வது படத்தை தயாரிக்கப் போவது, டிவிவி எண்டர்டெயின்மென்ட் என்ற தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனம். சூர்யா நடித்த கங்குவா படத்தை தயாரித்தது விவி கிரியேசன்ஸ் என்ற தெலுங்கு பட நிறுவனம். தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தை தயாரிப்பதும், தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்தான். சிவகார்த்திகேயன் நடிக்கும் ஏஆர்முருகதாஸ் படத்தையும், தெலுங்கு தயாரிப்பாளர் மது தயாரிக்கிறார்.

இப்படி முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை எல்லாம் தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் தயாரிக்க, இந்த நடிகர்களை எல்லாம் வளர்த்துவிட்ட தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், இன்று பட வாய்ப்புகளில் பல கோடிகள் நஷ்டப்பட்டு, கடனுக்கு வட்டிகட்டுக்கொண்டு இருக்கின்றனர் என்பதுதான் கசப்பான உண்மை. தங்களை வளர்த்துவிட்ட தமிழ் சினிமா தயாரிபபாளர்களை மறந்துவிட்டு, நடுரோட்டில் நிற்க வைத்துவிட்டு தெலுங்கு பட தயாரிப்பாளர்களை வாழவைக்க ஆரம்பித்துள்ளனர் தமிழ் சினிமா நடிகர்கள்.

- Advertisement -

சற்று முன்