- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2, இந்தியன் 3 குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்த உலக நாயகன்... அடுத்தடுத்த அப்டேட்கள்...

இந்தியன் 2, இந்தியன் 3 குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்த உலக நாயகன்… அடுத்தடுத்த அப்டேட்கள் இதோ…

- Advertisement -

1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. அப்பா மகன் என கமல் இரண்டு வேடங்களில் நடித்த இந்த திரைப்படம், நடிகர் கமலஹாசனின் நடிப்புக்கு முழு தீனி போடுவதாக அமைந்தது.

இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசன் தேசிய விருது பெற்றார். சங்கர் இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் மிகப்பெரிய வெற்றியை இந்த திரைப்படம் பெற்றது. லஞ்சத்திற்கு எதிராக படத்தில் இடம்பெற்ற வசனங்கள் மிகவும் கூர்மையாக இருந்தன.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஆனால் கமலுக்கும் சங்கருக்கும் இடையேயான பிரச்சனை, தயாரிப்பு நிறுவனத்துடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதன் பணிகள் தடைபட்டன.

இதன்பிறகு சூட்டிங் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தியன் 2 படத்திற்கான சூட்டிங் பணிகள் காலதாமதம் ஆனாலும், அதிக காட்சிகள் எடுக்கப்பட்டதாலும் இதனை இரண்டு பாகமாக எடுக்க சங்கர் முடிவு செய்தார். அதன்படி இந்தியன் 2 மற்றும் மூன்று பாகங்கள் படமாக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இதில், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ் ஜே சூர்யா மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்தியன் படத்திற்கான உயிரோட்டம் அதில் ஒரு துளி கூட இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இப்படியான சூழலில் அந்த திரைப்படம் குறித்து கமல்ஹாசன் பேசியிருக்கிறார். இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படத்திற்கான சூட்டிங் முடிவடைந்துள்ளது. தற்போது இந்தியன் 2 படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக இந்தியன் 3 படத்தின் வேலைகள் ஆரம்பமாகும். தேர்தல் முடிந்த பிறகு தக் லைப் படத்தின் சூட்டிங் நடைபெறும். இதன்பிறகு தான் தெலுங்கில் கல்கி படத்தில் நான் நடிக்கிறேன் என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்