- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் பட சாதனையை அடித்து நொறுக்கி முன்னேறிய சூர்யா - அந்த படத்தின் சாதனையும் விரைவில்...

விஜய் பட சாதனையை அடித்து நொறுக்கி முன்னேறிய சூர்யா – அந்த படத்தின் சாதனையும் விரைவில் முறியடிக்கப்படுமா? – ரசிகர்கள் ஆர்வம்!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு படம் மிக பிரமாண்டமான வெற்றியை பெற்றுள்ளது. இதுவரை 315 கோடி ரூபாய்க்கு மேல் அபாரமான வசூல் சாதனையை செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளா கர்நாடகா ஆந்திரா மாநிலங்களிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை நடிகர் சூர்யா நடித்த படங்களில் கருப்பு படம்தான் தியேட்டர் வசூல் என்கிற முறையில் 300 கோடி ரூபாயை கடந்துள்ளது. சிங்கம் 2 படம்தான் ரூ. 160 கோடி வசூல் என்ற நிலையில் இந்த படம் அதை விட 2 மடங்கு வசூலை ஏறக்குறைய தொட்டுவிட்டது. அதே நேரத்தில் மற்றொரு மெகா சாதனையை இந்த படம் செய்திருக்கிறது.

- Advertisement -

அதாவது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் பீஸ்ட். இந்த படத்தை தமிழ்நாட்டில் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை 1 கோடி பேர். அந்த சாதனையை கருப்பு படம் முறியடித்துள்ளது. ஏனெனில் இதுவரை கருப்பு படத்தை தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.

இதுவரை நடிகர் சூர்யா நடித்த படங்களில் கஜினி காக்க காக்க 7ம் அறிவு அயன் சிங்கம் படங்களுக்கு பிறகு இந்த படம்தான் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பெரிய மாஸ் ஹிட் படமாக உள்ளது. அதே நேரத்தில் கருப்பு 2ம் பாகமாக வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த லியோ படத்தை தமிழ்நாட்டில் மட்டும் பார்த்தவர்கள் எண்ணிக்கை 1.07 கோடி பேர். அந்த வகையில் இன்னும் 7 லட்சம் பேர் கருப்பு படத்தை பார்த்து விட்டால் லியோ படத்தின் சாதனையையும் கருப்பு படம் முறியடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நடிகர் சூர்யா நடித்த படங்களில் இதுவரை யாருமே தமிழ்நாட்டில் 1 கோடி பேர் என்கிற எண்ணிக்கையில் அவரது படத்தை பார்த்தது இல்லை. சூர்யா படங்களில் இந்த முதல் சாதனையையும் கருப்பு படம் செய்திருக்கிறது. கருப்பு படத்தின் அபார வெற்றியில் அடுத்து வரும் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

- Advertisement -

சற்று முன்