நடிகர் மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று, நடிகர் சூர்யா, அபர்ணா முரளி நடித்த சூரரைப் போற்று போன்ற வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. அவரது இயக்கத்தில் சூர்யா 2வது முறையாக நடிக்க கமிட் ஆன படம் புறநானூறு. இந்த படத்தை சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் சுதா கொங்கராவுடன் இணைந்து தயாரிக்க முன்வந்தது.
ஆனால் மதுரையில் படப்பிடிப்பு துவங்கிய சில வாரங்களில் சூர்யாவுக்கும், சுதா கொங்கராவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த படத்தை விட்டு சூர்யா வெளியேறினார். அதேபோல் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும் சில வாரங்கள் நடித்துவிட்டு சூர்யா விலகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சூர்யா நடிக்காமல் விலகிய அதே கதையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இது அவரது 25வது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி, கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கல்லூரி மாணவர் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார்தான் இசையமைக்கிறார்.
இப்போது ஜீவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படம் மென்டல் மனதில். இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்குகிறார். இந்த படத்தின் இசையமைப்பாளரும் ஜீவி பிரகாஷ்குமார்தான். இந்த படத்தை தயாரிப்பதும் அவர்தான். இப்போது மென்டல் மனதில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், அந்த ஷூட்டிங்கில் அவர் பிஸியாக நடித்து வருகிறார்.
அதே நேரத்தில் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 25 படப்பிடிப்பும் துவங்கி நடந்து வருகிறது. இந்த படத்தின் இசையமைப்பாளரும் ஜீவி பிரகாஷ்குமார்தான். இப்போது மென்டல் மனதில் படப்பிடிப்பில் அவர் இருப்பதால், எஸ்கே 25 படத்தின் இசையமைப்பு குறிப்பாக பாடல்களுக்கு இசையமைப்பது தடைபடுமே என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படம் ஆரம்பித்த போதே, அந்த படத்துக்கு இசையமைப்பாளராக கமிட் ஆன ஜீவி பிரகாஷ்குமார் 4 பாடல்களை போட்டுத் தந்துவிட்டார். அந்த 4 பாடல்களை தான் இப்போது எஸ்கே 25 படத்துக்கு பயன்படுத்த உள்ளனர். அதே நேரத்தில் அந்த 4 பாடல்களுக்கு 2டி நிறுவனத்திடம் சம்பளம் எதுவும் ஜீவி பிரகாஷ்குமார் வாங்கவில்லை. சுதா கொங்கராவிடம் உள்ள நட்பால் சம்பளம் வாங்காமல் விட்டதால், இப்போது அந்த பஞ்சாயத்தில் இருந்து ஸ்மார்ட் ஆக ஜீவி ப தப்பித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.





